அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதற்காக ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு வருகை தந்திருந்தார் அதிபர் புதின்.
டிரம்ப்-புதின் சந்திப்பு: டிரம்ப் மற்றும் புதின் ஆகியவரும் மூன்று மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. இருந்தாலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர். உலகமே டிரம்ப் புதின் சந்திப்பு குறித்து தான் பேசி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கு வருகை தந்தது உண்மையான புதினே கிடையாது அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ( Body double ) ஒரு நபரே என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

உண்மையான புதின் இல்லையா: எக்ஸ் தள பக்கத்தில் தற்போது இது குறித்து தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புதின் அமெரிக்க மண்ணிற்கு நேரடியாக வருகை தராமல் தன்னை போலவே இருக்கக்கூடிய ஒரு நபரை தான் அனுப்பி வைத்திருக்கிறார் என எக்ஸ் பக்கத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். வழக்கமாக புதின் எப்படி நடப்பார், அவருடைய முக பாவனைகள் எப்படி இருக்கும், அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் அமெரிக்காவிற்கு வருகை நபரின் நடத்தை முகபாவனை ஆகியவற்றையும் ஒப்பிட்டு வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்துள்ளனர்.
Body double ஐ அனுப்பினாரா புதின்: ஒரு நபர் புதின் எப்போதுமே சீரியசாக முகத்தை வைத்திருப்பார், அவர் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது, ராணுவத்தில் இருந்ததால் அவர் நடக்கும் விதமாக தனியாக தெரியும் ஆனால் அமெரிக்கா வந்த நபர் ஜோவியலாக இருந்தார், பல முகபாவனைகளை வெளிப்படுத்தினார், அவர் நடந்து வந்த விதமும் மாறுபட்டு இருந்தது என இவர் புதினே கிடையாது என கூறியுள்ளார்.
Anyone that still doesn't understand that this is Putin's most expendable double is a moron.pic.twitter.com/e64a5ePXdG
— Jay in Kyiv (@JayinKyiv) August 15, 2025
புகைப்பட ஆதாரம்: புதினின் கன்னம் இப்படி இருக்காது, இவரது கன்னத்தை பாருங்கள் கொழுகொழுவென இருக்கிறது, இவரின் செயல்கள் புதினை விட மாறுபட்டு இருக்கின்றன எனவே இவர் புதினே கிடையாது என ஒரு நபர் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
ஏன் இந்த சந்தேகம்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன்னை போன்ற முகம் தோற்றம் கொண்ட நபர்களை அதாவது body doubleகளை உருவாக்கி வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் பல காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது. புதினுக்கு உடல்நலம் சரியில்லாத போதும் எதிரிநாடுகளுக்கு செல்லும் போதும் புதின் தன்னுடைய body doubleகளில் ஒருவரை தான் அனுப்புவார் என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications