ஒவ்வொரு நாடும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளன. தன்னுடைய பாதுகாப்பிற்கு எனப் பல்வேறு ஆயுதங்களைத் தயாரித்து மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளன. எந்த ஒரு நாடும் தற்காப்பிற்கு ஆயுதங்களை நாடுவது, அந்த நாடுகளின் தார்மீக கடமை என்றே கருதப்படுகின்றது. எனினும், ஒரு நாடு தன்னுடைய ராணுவ மேலாண்மையை நிலை நிறுத்த அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது, அது உலகிற்கே பேரழிவாக மாறி விடுகின்றது.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் இத்தகைய நிகழ்விற்குச் சாட்சியாக நிற்கின்றன. அதிலும் அணு ஆயுதங்களைக் கணக்கின்றி வைத்திருக்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படும் சண்டை மற்றும் சச்சரவுகள், இந்த உலகின் இறுதி நாட்களுக்கு வழி வகுக்குமோ? என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
ரஷ்யாவா? உக்ரைனா?
தற்பொழுது ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் நடைபெறும் யுத்தம் பல பல பரிமாணங்களைக் காட்டி வருகின்றது. யுத்தம் நடப்பது என்னவோ ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே. ஆனால், உக்ரைனின் பின்னால் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் உள்ளன. எனவே இந்த யுத்தம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நடைபெறுகின்றது என்றே எடுத்துக் கொள்ளலாம்.
விளாடிமிர் புடின்
ஒரு சாதாரண மனிதனின் கண்ணிற்கு வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மை ரஷ்யாவை ஆட்டிப் படைக்கும், அந்த நாட்டின் அதிபரான புடினுக்குத் தெரியாமலா இருக்கும். இந்த நிலையில் விளாடிமிர் புடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்.
விளாடிமிர் புடின் திடீர் முடிவு
கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலகி விட்டார். இந்தச் செயல், இவ்விரு நாடுகள் கடந்து உலகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றது. இதன் தாக்கம் எத்தகையது என்பதைச் சற்று விரிவாகப் பார்த்தால் உங்களுக்கே இந்த நிலைமையின் கலவரம் புரியும்.
ஒரு வருட நிறைவு
உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கிய முதல் ஆண்டு நிறைவுக்குச் சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு மக்களுக்குப் பிப்ரவரி 21 ஆற்றிய உரையில், அமெரிக்கா உடனான கடைசிப் பெரிய இராணுவ ஒப்பந்தமான New START இல் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்திக் கொள்கிறது என்று அறிவித்தார்.
New START ஒப்பந்தம்
New START ஒப்பந்தத்தின் கீழ் ஒரு முக்கியத் தேவையாக ஒரு நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா ஆய்வு செய்யலாம். இதன் மூலம் இந்த ஒப்பந்தம் படி ரஷ்யாவின் இராணுவ வசதிகளை அமெரிக்கா ஆய்வு செய்ய விரும்புகிறது, அதே நேரத்தில் அதன் இலக்கு ரஷ்யாவின் மூலோபாயத் தோல்வி என்று வெளிப்படையாகக் கூறுவது "அபத்தமான நாடகம்" என்று புடின் கூறினார்.
நியூ START ஒப்பந்தம் என்றால் என்ன?
"Strategic Arms Reduction Treaty" என்பதில் இருந்து உருவானது தான் START என்ற பெயர், இதில் START-I என்பது 1991 இல் அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் கையெழுத்தாகி, 1994 இல் நடைமுறைக்கு வந்தது.
அணு ஆயுதங்கள்
START-I ஒப்பந்தம் கீழ் ஒரு நாடுகளும் தால 6,000 அணு ஆயுதங்கள் மற்றும் 1,600 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் (ICBMs) என்ற எண்ணிக்கையில் ஆயுத இருப்புகளை நிலைநிறுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
START-I ஒப்பந்தம்
1994 இல் நடைமுறைக்கு வந்த START-I ஒப்பந்தம் 2009 இல் காலாவதியானது, எனவே இதை Strategic Offensive Reductions Treaty மூலம் ரீப்ளேஸ் செய்யப்பட்டு (SORT, என்றும் அழைக்கப்படுகிறது. மாஸ்கோ உடன்படிக்கை), பின்னர் நியூ START ஒப்பந்தம் எனப் பெயரை பெற்றது.
புதிய மாற்றங்கள்
நியூ START ஒப்பந்தம் என்பது அதிகாரப்பூர்வமாக, "அமெரிக்காவிற்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம், மூலோபாயத் தாக்குதல் ஆயுதங்களை மேலும் குறைத்தல் மற்றும் வரம்புக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள்" குறித்த விதிமுறைகளைக் கொண்டு பிப்ரவரி 5, 2011 இல் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கண்டங்களுக்கு இடையே புதிய அணு ஆயுதங்கள் அளவிலும் கட்டுப்பாடு வைத்தது.
ரஷ்ய அதிபர் செவ்வாய்க்கிழமை முடிவு
இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இந்த ஒப்பந்தம் குறித்துப் பிப்ரவரி 5, 2018ல் ஒன்று கூடி ஆலோசனை செய்து ஒப்பந்த காலம் வரையில் ஆயுதங்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்தக் கூட்டம் பிப்ரவரி 4, 2026ல் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications