உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. ஏஐ தொழில்நுட்பம் தான் இதற்கு காரணமாக இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த சேல்ஸ் போர்ஸ் , தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் கணிசமானவர்களை வேலைகளில் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சடைய வைத்திருக்கிறது. சேல்ஸ் போர்ஸ் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு துறைகளில் வேலை செய்யக்கூடிய சுமார் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

பிசினஸ் இன்சைடர் இது தொடர்பான தகவலை வெளியிட்டு இருக்கிறது. தங்கள் நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்யும் ஒரு பணியாக இந்த பணி நீக்க நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சேல்ஸ் போர்ஸ் கூறியிருக்கிறதாம். சேல்ஸ் போர்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் ஊழியர்கள் படிநிலையிலும் தலைமை நிலையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
இதனால் தான் ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தற்போது வேலையை இழந்து இருக்கிறார்கள். மார்க்கெட்டிங் , டேட்டா அனலிட்டிக்ஸ், ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் மற்றும் சேல்ஸ் போர்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஃபோர்ஸ் ஏஐ ப்ராடக்ட் பிரிவில் வேலை செய்து வந்த பலரும் தங்களுடைய வேலையை இழந்திருக்கிறார்கள்.
அண்மையில் தான் சேல்ஸ் போர்ஸ் நிறுவனம் ஏஐ ஏஜென்ட் பிரிவில் ஏஜெண்ட் போர்ஸ் என்ற தனி பிரிவை உருவாக்கியது. தற்போது அதில் வேலை செய்ய கூடியவர்களையே பணிநீகக்ம் செய்திருப்பது தான் வேடிக்கை. சேல்ஸ் போர்ஸ் கடந்த ஓஒராண்டாகவே ஏஐ தொழில்நுட்பத்தில் முழு கவனத்தையும் செலுத்துகிறது. முதல் கட்டமாக கஸ்டமர் சப்போர்ட் பிரிவிலிருந்து 9000 ஊழியர்களை 5000 ஊழியர்கள் என குறைத்தது. கஸ்டமர் சப்போர்ட் பிரிவில் பெரும்பாலான வேலையை ஏஐ மற்றும் ஏஐ ஏஜெண்ட்கள் வசம் ஒப்படைத்தது.
தற்போது மேலும் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் தான் ஆகிறது இதுவரை 31 நிறுவனங்கள் 25 ஆயிரத்து 644 ஊழியர்களை வேலையில் நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன. இது அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு தானே தவிர உண்மையில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் தான்.
அமேசான் நிறுவனம் கூட 16000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. 2025இல் தான் லட்சக்கணக்கான வேலைகளை ஏஐ காவு வாங்கியது என்றால் 2026இலும் அதே நிலைமை தான் தொடரும் போல என டெக் ஊழியர்கள் புலம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications