சியோல்: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சாம்சங் நிறுவனம் விற்பனையில் 12 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
மொபைல் விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவின் காரணமாக இந்நிறுவனத்தின் வருமான அளவு கடந்த வருடத்தை விட 31 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
சாம்சங்
சர்வதேச சந்தையில் ஜியோமி, ஆப்பிள் போன்ற நிறுவன தயாரிப்புகள் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால், சாம்சங் தயாரிப்பின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. குறிப்பாக ஜியோமியின் கவர்ச்சியான விலை இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
இதன் வெளிப்பாடாகவே கடந்த 5 காலாண்டுகளாகச் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை குறைந்து வருகிறது.
லாபம் அளவீடுகள்
ஜனவரி - மார்ச் காலாண்டில் சாம்சங் நிறுவனத்தின் லாப அளவீடுகள் சந்தை கணிப்புகளான 5.5 டிரில்லியன் வான் என்ற அளவை விட உயர்ந்து 5.9 டிரில்லியன் வானாக (5.4 பில்லியன் டாலர்) என்ற அளவை அடைந்துள்ளது.
31 சதவீதம் சரிவு
இக்காலகட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை அளவு 12 சதவீதம் குறைந்து 43 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் 2014ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் மொத்த வருமானத்தின் அளவில் 31 சதவீதம் சரிந்துள்ளது.
மொபைல் விற்பனை
சாம்சங் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் மூன்றில் 2 பங்கு மொபைல் விற்பனையின் மூலம் கிடைக்கிறது.
சர்வதேச சந்தையில் இந்நிறுவன விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதால் நிறுவனத்தின் நிதிநிலை மோசமான நிலையை அடைந்து வருவதாகச் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்பு
விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதால் புதிய பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்திய சில நாட்களில் அவற்றின் விலையை 20 சதவீதம் வரை குறைக்கிறது சாம்சங்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications