ஒரேயொரு போனால் வந்தது வினை.. 'சாம்சங்' படும்பாட்டைப் பாருங்க..!

சர்வதேச மொபைல் விற்பனை சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாகச் சாம்சங் நிறுவனம் தயாரித்த உயர் ரக ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 7 பல்வேறு பரிச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

இதில் முக்கியமாகச் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வாங்கிப் பல வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் வெடித்துள்ளது, சிலரின் போனில் இருந்து மிகப்பெரிய அளவில் புகை வந்துள்ளது. இதன் எதிரொலியாகக் கேலக்ஸி நோட் 7 உட்படச் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு மாடல்களுக்கு விமானத்தின் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 தயாரிப்பை முழுமையாக நிறுத்த உத்திரவிட்டுள்ளது.

சாம்சங்

சாம்சங்

தென் கொரியாவை தலைமையாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பை நிறுத்த உத்தரவிட்ட பின்னர்ச் சியோல் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை மட்டும் சுமார் 3 சதவீதம் வரை சரிந்தது.

கடந்த 6 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்கு சுமார் 8.04 சதவீதம் வரை சரிந்து வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை நிறுத்திய நிலையில் உலகம் முழுவதும் உள்ள தனது டீலர்களிடம் இதன் விற்பனை முடக்குமாறு உத்திரவிட்டுள்ளது.

ஆனால் கேலக்ஸி நோட் 7 வெளியான துவக்கத்தில் வெடிக்கும் பிரச்சனையைச் சந்தித்த பல வாடிக்கையாளர்களுக்குப் புதிய போனை சாம்சங் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

பிராண்ட்

பிராண்ட்

கேலக்ஸி நோட் 7 சந்தைப் பிரச்சனையால் இதன் உற்பத்தியும், விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய போராட்டத்தைச் சாம்சங் சந்திக்க உள்ளது.

சந்தையில் சாம்சங் நிறுவனத்திற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

 

ஆப்பிள் உடன் போட்டி

ஆப்பிள் உடன் போட்டி

அமெரிக்கா, பிரிட்டன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 தயாரிப்பை வெளியிட்ட அடுத்தச் சில நாட்களில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விற்பனை செய்யப்பட்ட 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 மொபைல் போனை வாடிக்கையாளர்களுக்கு எப்படி மாறிக்கொடுப்பது என்பதைச் சாம்சங் யோசித்து வருகிறது.

 

கூகிள்

கூகிள்

ஆப்பிள், சாம்சங் மத்தியில் போட்டியில் பேட்டன் காபி, கேலக்ஸி நோட் 7 போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அதிகளவில் வாடிக்கையாளர்களை இழந்து வரும் சாம்சங் நிறுவனத்திற்கு மற்றொரு பிரச்சனையாகத் தற்போது கூகிள் விளங்குகிறது.

மொபைல் வர்த்தகம்

மொபைல் வர்த்தகம்

கூகிள் நிறவனம் மொபைல் வர்த்தகச் சந்தையில் இறங்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வரும் நிலையில், சாம்சங் வீழ்ச்சியைப் பயன்படுத்துத் தற்போது சந்தையில் குதித்துள்ளது.

மொபைல் வர்த்தகத்தில் இறங்குவதற்காகவே ஆண்டுராய்டு மென்பொருளை உருவாக்கியது மட்டும் அல்லாமல் வன்பொருளையும் தயாரிக்க மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கியது கூகிள்.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக மோட்டோரோலா நிறுவனத்தை நஷ்டத்திற்கு விற்பனை செய்தது.

 

பிக்செல்

பிக்செல்

பல கட்ட முயற்சிகளுக்குப் பின் கூகிள் நிறுவனம் தற்போது தனது சொந்த முயற்சியில் 'பிக்செல்' என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கூகிள் நிறுவனத்தின் தற்போதைய அறிமுகம் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனத்திற்கு மத்தியில் சாம்சங் காணாமல் போகக் கூட வாய்ப்புகள் உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+