உலகின் முன்னணி எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான சாம்சங், சீனாவில் ஏற்பட்ட வர்த்தக சரிவால் நிறுவனத்தை மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகிறது.
இதன் படி 2016ஆம் ஆண்டில் சுமார் 7 வருட வர்த்தகத்தில் முதல் முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
5.2 சதவீதம் சரிவு..
இதன் படி 2016ஆம் ஆண்டில் உலக நாடுகளில் இருக்கும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 3,25,677 இல் இருந்து 3,08,745 ஆக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 5.2 சதவீதம் குறைவு.
சீனாவில்..
அதுவும் சீனாவில் ஊழியர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 17.5 சதவீதம் வரை சரிந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் 44,948 ஆக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை 37,070 ஆக குறைந்துள்ளது.
அதேபோல் வட மற்றும் தென் அமெரிக்காவில் இதன் எண்ணிக்கை 8.5 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
விற்பனை
சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் பிரின்டிங் வர்த்தகம் எச்பி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
சாம்சங் நிறுவனமும் ஊழியர்கள் எண்ணிக்கை சரிவிற்கும் இதேதான் காரணமாக காட்டியுள்ளது.
பெண் ஊழியர்கள்
மேலும் சாம்சங் நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் அளிக்கப்பட்ட பதவி உயர்வு 2016ஆம் ஆண்டில் 12.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சாம்சங்
உலகளவில் சாம் நிறுவனம் சுமார் 2,468 வர்த்தக கூட்டணியை வைத்துள்ளது. இதில் 238 பெரிய உற்பத்தி ஆலைகள், 53 விநியோக சென்டர்கள், 34 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள், 7 டிசைன் சென்டர்கள் மற்றும் 73 சர்வீஸ் சென்டர்கள் என உலகம் முழுவதும் விரிந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications