சாம்சங் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், சீனா நிறுவனங்களுக்கு முன்னால் பின்னடைவை சந்தித்தன எனலாம்.
அதிலும் சாம்சங் நிறுவனம் சீனாவின் ஹுவாய் நிறுவன வருகைக்கு பின்னர் பெரும் பின்னடைவையே சந்தித்தது.
ஆனால் அமெரிக்கா சீனா இடையேயான பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் மீது தடையை விதித்தது. இது ஹூவாய் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், சாம்சங் நிறுவனத்திற்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தடை
ஹூவாய் நிறுவனத்தின் சிப்கள் மற்றும் மொபைல் பாகங்கள் தடையால், ஹூவாய் நிறுவனம் சற்று பின்னடைவை சந்தித்தது. எனினும் அமெரிக்காவின் தடையால் ஹூவாய்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் சாம்சங்கிற்கு நழுவி போயுள்ளன. உலகின் மிகப்பெரிய சிப் நிறுவனமான இது, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதன் லாபம் 48.8% அதிகரித்து, 9.36 டிரில்லியன் ரூபாயாக வென்றுள்ளது.
சாம்சங்கின் வளர்ச்சியின் முக்கியத்துவம்
இந்த நிறுவனம் மாபெரும் சாம்சங் குழுமத்தின் முதன்மை துணை நிறுவனமாகும். இது உலகின் 12வது பெரிய பொருளாதாரத்தின் மிகப்பெரிய வணிகமாகும். இது தென் கொரியாவின் பொருளாதார ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இந்த அறிவிப்பானது சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மறைந்த சில தினங்களுக்கு பின்பு இந்த அறிக்கை வந்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. எனினும் இது மூன்றாவது காலாண்டில் சற்று வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது. இது எதிர்பார்த்ததை விட சிறந்த ஏற்றுமதி செயல்திறனால் உந்தப்பட்டதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விற்பனை அதிகரிப்பும் ஒரு காரணம்
ஆகஸ்ட் மாதத்தில் சாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 2 ஆகியவற்றின் வலுவான விற்பனை, மூன்றாம் காலாண்டு செயல்திறனுக்கு வழிவகுத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதோடு அமெரிக்காவின் தடை உத்தரவும் சாம்சங்கின் வளர்ச்சிக்கு கைகொடுத்ததாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications