அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்கா இஸ் பேக் என்று கூறினார் ஜோ பைடன். உண்மையில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்தினை நோக்கில் நகர்த்தும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தென் கொரியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான சாம்சங், அமெரிக்காவில் 17 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்த ஆலையை அமெரிக்காவின் அரிசோனா டெக்சாஸ் அல்லது நியூயார்க்கில் நிறுவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
பல பில்லியன் $ ஒதுக்கீடு செய்ய திட்டம்
இதற்காக பல இடங்களில் இடங்களை ஆராய்ந்து வருவதாகவும், இதனையறிந்தவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதன் சிப் உற்பத்தியினை அதிகரிக்கவும், தைவான், சீனா மற்றும் தென்கொரியா மீதான அதன் நம்பகத்தன்மையை குறைப்பதற்கும், பல பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்வதாக கடந்த ஜனவரியிலேயே அறிவித்தது. எனினும் இந்த நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
1,900 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம்
இதற்கிடையில் தான் சாம்சங்கின் இந்த திட்டம் வந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சாம்சங்கின் இந்த ஆலை நிறுவப்பட்டால் 1,900 பேர் வரை வேலை கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நிறுவ திட்டமிட்டுள்ள இந்த ஆலையானது அக்டோபர் 2022க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் இது போன்ற சலுகை கிடையாது
அமெரிக்கா வரலாற்றில் இது போன்ற சிப் ஆலைகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஆனால் 5ஜி ஸ்மார்ட்போன்கள் முதல் ஜெட் பைட்டர்ஸ் வரையிலான தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான முக்கிய பொருட்கள், விநியோக சங்கிலி பாதிப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க, இது போன்ற அறிவிப்பினைக் கொடுக்க தூண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நல்ல விஷயம் தான்
சாம்சங் நிறுவனம் கடந்த 1990களில் இருந்து ஆஸ்டினில் சிப் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இதனை இன்னும் விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த ஆலைக்கு அருகிலேயே இடம் வாங்கியுள்ளதாக உள்நாட்டு செய்திகள் கூறுகின்றன. எது எப்படியோங்க அதிபராக பதவியேற்றுள்ள பைடனின் வருகைக்கு பின்பு, உண்மையில் அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது என்று தான் கூற வேண்டும். புதிய ஆலைகள், புதிய ஊக்கத்தொகை அறிவிப்பு என பலவும் அமெரிக்காவுக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளன. உண்மையில் இது அமெரிக்காவுக்கு, இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications