இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை, ஒரு சர்வதேச பிரச்சனையாக பார்க்கத் தொடங்கியதில் இருந்து, பல கார்ப்பரேட் கம்பெனிகளும், தங்கள் உற்பத்தி ஆலைகளை, சீனாவில் இருந்து வெளியேற பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், நம் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 மாடல்களைத் தயாரிக்கத் தொடங்குவதாகச் சொல்லி இருந்தது ஒரு உதாரணம்.
இப்போது, மற்றும் ஒரு எலெக்ட்ரானிக் ஜாம்பவானான, சாம்சங் சீனாவுக்கு ஒரு ஷாக் கொடுத்து இருக்கிறது. என்ன ஷாக்? வாருங்கள் கட்டுரையில் பார்ப்போம்.
Suzhou நிறுத்தம்
கம்யூனிஸ்ட் தேசமான சீனாவின், சுசு (Suzhou) என்கிற நகரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு, சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் உற்பத்தி ஆலை இருக்கிறது. இது தான் சாம்சங் கம்பெனிக்கு, வெளிநாடுகளில் இருக்கும் கடைசி கம்ப்யூட்டர் உற்பத்தி ஆலை. இந்த ஆலையிலும் கம்ப்யூட்டர் உற்பத்தி வேலைகளை நிறுத்தப் போவதாக ஷாக் கொடுத்து இருக்கிறது சாம்சங். இதை, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையும் தன் வலை தளத்தில் செய்தியாக வழியாக உறுதி செய்து இருக்கிறது.
தொழிலாளர் செலவுகள்
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் பிரச்சனைகள் மற்றும் ஜியோ பொலிடிக்கல் பிரச்சனைகளைத் தாண்டி, சீனாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் செலவுகள் போன்றவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட், பல கம்பெனிகள் சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டு இருக்கிறார்களாம்.
ஊழியர்கள் கதி
சீனாவின் சுசு (Suzhou) ஆலையில், வேலையில் இருந்த 1,700 ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வேலைகள் பாதிக்கபடலாமாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். 2012-ம் ஆண்டு வாக்கில், இதே உற்பத்தி ஆலையில் சுமார் 6,500 ஊழியர்கள் வேலை பார்த்தார்களாம்.
வியாபாரம் சரிவு
2012-ம் ஆண்டு வாக்கில், இந்த கம்ப்யூட்டர் உற்பத்தி ஆலையில் இருந்து சுமாராக 4.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆளவுக்கு சரக்குகள் உற்பத்தி செய்து வெளியே அனுப்பப்பட்டனவாம். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டில் இதே ஆலையில் உற்பத்தி 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சரிந்துவிட்டதாகச் சொல்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை.
சாம்சங் தரப்பு
சீனா, சாம்சங் நிறுவனத்தின் முக்கியமான சந்தை தான். சாம்சங், தொடர்ந்து சீன வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான பொருட்களையும், சேவைகளையும் வழங்குவோம் எனச் சொல்லி இருக்கிறது சாம்சங் கம்பெனி தரப்பு. சீனாவுக்கு நேரம் அத்தனை நன்றாக இல்லை போல் இருக்கிறதே? தொடர்ந்து கம்பெனிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்களே!
சமீபத்தைய அடிகள்
கடந்த ஆண்டில் தான், தென் கொரியாவின் சாம்சங் கம்பெனி, சீனாவில் இருந்த, தன் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி ஆலைக்கு பூட்டு போட்டது. இப்போது சாம்சங் கம்பெனிக்கு சொந்தமாக இரண்டு செமி கண்டெக்டர் உற்பத்தி ஆலைகள் சுசு (Suzhou) மற்றும் சியான் (Xian) பகுதியில் இருக்கிறதாம்.
சீன பொருளாதாரம்
சீன என்கிற நாடு இன்னும் கணிசமான அளவில் உற்பத்தியை நம்பித் தான் இருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிந்து இப்போது தான் மெல்ல சீன பொருளாதாரம் தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது அதற்குள் இப்படி கம்பெனிகள் வெளியேறத் தொடங்கினால் சீன மக்களின் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பால் அவர்கள் கையில் புழங்கும் பணம், அந்த பணத்தால் சீன பொருளாதாரத்தில் அதிகரிக்கும் நுகர்வு என எல்லாமே அடி வாங்கும். எப்படி இந்த சவால்களை சீனா சமாளிக்குமோ... சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் வெளிச்சம்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications