அமெரிக்கா சீனா இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்கா அடுத்தடுத்த தடைகளை சீனா மீது விதித்து வருகின்றது. ஏனெனில் சீன நிறுவனங்கள், சீன அரசுக்கு உளவாளிகளாக செயல்பட்டு வருகின்றன. அதோடு அமெரிக்காவின் தொழில்நுட்பம் திருடப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கைகள் சீனாவுக்கு பாதகமாக தோன்றினாலும், மற்ற நாடுகளுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சீனாவுக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான வாய்ப்புகள் எல்லாம் நழுவி, மற்ற நாடுகளுக்கு கிடைத்துக் கொண்டுள்ளது.
சாம்சங்கிற்கு பெரிய ஆர்டர்
ஏனெனில் அமெரிக்கா சீனாவின் டெக் ஜாம்பவான் ஆனா ஹூவாய் நிறுவனத்திற்கு கடுமையான விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் இன்க் நிறுவனம் 6.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டரை சாம்சங் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இது கொரோனாவின் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
சாம்சங்குடன் ஒப்பந்தம்
அதோடு சாம்சங் நிறுவனம் தனது இழந்த சந்தை பகுதியை மீட்டெடுக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தமானது கடந்த வெள்ளிக்கிழமையன்று இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமானது அடுத்து வரும் டிசம்பர் 2025 வரை செல்லுபடியாகும் எனவும் பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் சாம்சங் தெரிவித்துள்ளது.
5ஜியை மேம்படுத்துவோம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இதுவரை சாம்சங்கிற்கு கிடைத்த ஒப்பந்தங்களிலேயே மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இது குறித்து சாம்சங் நிறுவனம் வெரிசோனின் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அனுபவங்களை மேம்படுத்த 5ஜி கண்டுபிடிப்புகளின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம்.
சீனாவுக்கு பலத்த அடி
உலகின் மிகப்பெரிய மெமரிசிப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கேஜெட் தயாரிப்பாளரான சாம்சங், 5ஜி சந்தையில் தனது சந்தையினை விரிவுபடுத்தி வருகின்றது. இது ஆறாவது தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளில் முதலீடு செய்வதற்கும் கடுமையாக முயன்று வருகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் பற்றிய முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால் இது சீனாவுகு சரியான அடி என்பது மட்டும் உண்மையே.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications