தென் கொரியாவின் பொருளாதாரத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான சாம்சங் நிறுவன வரலாற்றில் முதன் முதலாக தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்த அறிவிப்பு, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே உருவாகியுள்ள கடுமையான போட்டிக்கு மத்தியில் வந்துள்ளது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இயங்குவதற்கு முக்கியமானதாக இருக்கும் மெமரி சிப் தயாரிப்பு துறையில் தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பெரும் பின்னடைவை அளிக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் மெமரி சிப் பிரிவில் பணிபுரிபவர்களே, இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அதிக அளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு மற்றும் போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல சுற்றுகள் முடிந்தும் தோல்வியடைந்துள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
"சாம்சங் நிறுவனம், பேச்சுவார்த்தைக்கான கூட்டாளியாக தொழிற்சங்கத்தை ஏற்பதில்லை" என்று நாடு முழுவதும் உள்ள ஐந்து தொழிலாளர் குழுக்களில் மிகப்பெரியதான "நேஷன்வைடு சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன்" துணைத் தலைவர் லீ ஹியூன் குக் தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்கம் 28,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இது சாம்சங் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர் படை மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் நடந்த வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட 75% பேர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார்.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர், நிறுவனம் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தி செயல்பாட்டை பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விடுமுறை மற்றும் வார இறுதிக்கு இடையில், அதாவது பல தென் கொரிய மக்கள் விடுமுறை எடுக்க திட்டமிட்டிருந்த நாளில் இந்த வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் எத்தனை தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்பது தெளிவாக இல்லை. வெள்ளிக்கிழமை காலை தலைநகர் சியோலில் உள்ள சாம்சங் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஒரு சிறிய போராட்டத்தில், தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். போராட்ட அமைப்பாளர்கள் ஸ்பீக்கர்கள் மூலம் போராட்ட கோஷங்களை எழுப்பினர்.
ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, சாம்சங் நிர்வாகம் தனது வாடிக்கையாளர்கள், சப்ளையர்களிடம் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. சாம்சங் 4 காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில், 2024 மார்ச் காலாண்டில் தான் 1.4 பில்லியன் டாலர் லாபத்தை பெற்றது, இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications