உலகின் முன்னணி டெக் நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்கியர் தயாரிக்கும் 21.88 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பென்டகன்- னிடம் இருந்து பெற்றுள்ளது.
தற்போது சந்தையில் கிடைக்கும் ஹோலோலென்ஸ் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்கியர் ராணுவ வீரர்களின் பாதுகாப்பைப் பெரிய அளவில் மேம்படுத்தும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அலெக்ஸ் கிப்மேன் தெரிவித்துள்ளார்.
10 வருட ஒப்பந்தம்
முதற்கட்டமாக ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்கியர் தயாரிக்க 5 வருட ஒப்பந்தம் மட்டுமே மைக்ரோசாப்ட் பெற்றுள்ளது. மைரோசாப்ட் உடனான கூட்டணி சிறப்பான பணியாற்றும் பட்சத்தில் அடுத்த 5 வருடம் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
21.88 பில்லியன் டாலர் மதிப்பு
இந்த 10 வருட ஒப்பந்தத்தில் மொத்த மதிப்பு 21.88 பில்லியன் டாலர் என்னும், பென்டகனிடம் இருந்து இந்த ஒப்பந்தம் கைப்பற்றக் கடுமையான போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் படி மைக்ரோசாப்ட் உடனடியாகத் தனது தயாரிப்பு பணிகளைத் துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆக்மென்டெட் ரியாலிட்டி
இந்த ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்கியர் மூலம் ராணுவ வீரர்களுக்கு இரவு நேர பாதுகாப்பில் அடுத்தத் தலைமுறை சேவைகளையும், Close Combat Force முறையில் விரைவாகத் தற்காத்துக்கொள்ள இது உதவும் எனப் பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம்
அமெரிக்க ராணுவத்திடம் இருந்து மைக்ரோசாப்ட் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள இந்தச் சூழ்நிலையில் ஆக்மென்டெட் ரியாலிட்டி துறையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வர்த்தகம் உருவாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் எதிர்காலத்தில் அதிகப்படியான வாய்ப்புகளையும் இத்துறையில் பெறும் எனக் கூறப்படுகிறது.
கிளவுட் கம்பியூட்டிங் ஒப்பந்தம்
இதேபோல் பென்டகன் கடந்த ஆண்டு இறுதியில் தனது 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள கிளவுட் கம்பியூட்டிங் ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தைப் பெற அமேசான் மிகவும் தீவிரமாக இருந்தது, சொல்லப்போனால் அமேசான் டொனால்டு டிரம்ப் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டு உள்ளார் எனக் குற்றச்சாட்டையும் முன்வைத்தது.
Hololens ஹெட்கியர்
தற்போது மைக்ரோசாப்ட் தயாரிக்கும் ஹோலோலென்ஸ் ஹெட்கியர் சுமார் 3,500 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது இந்நிறுவனத்தின் கிளவுட் கம்பியூட்டிங் சேவையான AZURE உடன் இணைக்கப்பட்டு டிஜிட்டல் மாய அனுபவத்தை வழங்குகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications