சவூதி அரேபியா ரயில்வே மற்றும் இத்தாலியின் அர்செனலே குழுமத்துக்கு இடையே உருவாக இருக்கும் கூட்டணி, சவூதி அரேபியா 'ட்ரீம் ஆஃப் தி டெசர்ட்' என்று அழைக்கப்படும் ஒரு சொகுசு அனுபவம் அளிக்கும் ரயிலை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பஷார் பின் காலித் அல்-மாலிக் மற்றும் இத்தாலியின் அர்செனலே குழுமத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பாவ்லோ பார்லெட்டா ஆகியோர் சவுதி நாட்டின் தேசிய சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் திட்டத்தை மேம்படுத்துவதற்காக கையெழுத்திட்டனர்.

ரியாத் டூ அல் குரையாத் உடன் இணைத்து சுமார் 1300 கிலோமீட்டர் ரயில் பயண அனுபவத்தை இந்த சொகுசு ரயில் வழங்குகிறது. அடுத்த பத்தாண்டின் இறுதியில் 150 மில்லியன் பயணிகளை ஈர்க்கும் சவுதி அரேபியாவின் மாபெரும் திட்டத்தில் இந்த சொகுசு ரயில் முக்கிய பங்காற்ற உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கள் நிலையை உயர்த்துவதற்காக பயணம் மற்றும் சுற்றுலாவுக்கு சவுதி அரேபியா நாடு 800 பில்லியன் டாலர்களுக்கு மேல் ஒதுக்கியுள்ளது.
சவுதியின் ஸ்டைல் மற்றும் பாரம்பரியத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட 40 நேர்த்தியான கேபின்களைக் கொண்ட இந்த ரயில் ஒன்று அல்லது இரண்டு இரவு பயணங்களை 82 பயணிகளை ஏற்றிச் செல்லும். அதற்கான முன்பதிவு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் திறக்கப்படும்.
சவூதி அரேபியாவின் முதல் ரயில்வே ஹெஜாஸ் ரயில்வே ஆகும், இது டமாஸ்கஸிலிருந்து மதீனா வரை ஒட்டோமான் பேரரசால் கட்டப்பட்டது.
சவூதியின் ரயில் அமைப்பு அரசுக்கு சொந்தமான இரயில் நிறுவனமான சவூதி அரேபியா ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது.
இந்நிறுவனம் தற்போது ரியாத்தில் இருந்து இரண்டு நிலையான பயணிகள் பாதைகளையும் அல் மதீனா மற்றும் மக்கா இடையே அதிவேக ரயில் பாதையையும் இயக்குகிறது.
கட்டம் I தொகுப்பு 1-க்கான 6.79 பில்லியன் ரியால் (US$1.8 பில்லியன்) வடிவமைப்பு மற்றும் கட்டுமான ஒப்பந்தம் மார்ச் 2009 இல் அல் ராஜ்ஹி அலையன்ஸுக்கு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications