பொழுதுபோக்குத் துறையில் 64 பில்லியன் டாலர் முதலீடு.. சவுதி அரேபியா முடிவு..!
சவுதி அரேபிய அரசு தற்போது அடுத்தத் தலைமுறையினருக்கான நாட்டை உருவாக்கும் முயற்சியில் உள்ளது, இந்நாட்டின் சமுக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்த திட்டங்களின் வாயிலாக இந்நாட்டில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது சவுதி அரசு.
இந்நிலையில் தற்போது பொதுப்போக்குத் துறையில் அடுத்த 10 வருடத்தில் மட்டும் சுமார் 64 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து இத்துறையை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை பொதுப் பொழுதுபோக்குத் துறை தலைவர் அகமது பின் அகவீல் அல் காதிப் தெரிவித்தார்.
இந்த முதலீடு அரசிடம் மட்டும் இல்லாமல் தனியார் துறையில் இருந்தும் வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களும் இனி இத்துறையில் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications