சவுதி அரேபியா ரியாத் ஏர் என்ற புதிய விமான சேவையை தொடங்க இருப்பதாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியா அரசின் புதிய விமான சேவை நிறுவனத்தின் பெயர் ரியாத் ஏர், அரபு நாடுகள் பெரும்பாலான விமான சேவை நிறுவனங்களை நடந்தி வரும் நிலையில் சவுதி அரேபிய அரசும் இத்துறையில் இறங்கியுள்ளது.
ரியாத் ஏர் மூலம் ஆசிய, ஆப்பரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும், உலகளாவிய சுற்றுலாவிற்கான நுழைவு வாயிலாகவும் இருக்கும் என PIF அறிக்கை கூறுகிறது.
போட்டி உலகில் நுழைந்த சவுதி அரேபியா!
அதிகம் போட்டி நிறைந்த விமானப் போக்குவரத்துத் துறையில் சவுதி அரேபியா நுழைந்துள்ளது. மேலும் ரியாத் ஏர்லைன்ஸ், ஏற்கனவே உள்ள விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் போன்றவற்றிக்கு போட்டியாக இருக்கும்.
பிஐஎஃப் (Public Investment Fund)
இந்த ஏர்லைன் வணிகம் முழுக்க முழுக்க சவுதியின் Public Investment Fundக்கு சொந்தமானதாகும். PIF சுமார் 600 பில்லியன் டாலருக்கும் மேலான சொத்துக்களை முதலீடு செய்து நிர்வாகம் செய்து வருகிறது. இது சவுதி அரேபியா அரசின் சொந்த முதலீட்டு நிறுவனமாகும்.
சிஇஓ
இந்த நிலையில் ரியாத் ஏர் நிறுவனம் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட்-ல் தான் இந்த ஏர்லைனின் உரிமை இருக்கப் போகிறது. பப்ளிக் முதலீட்டு நிதியத்தின் கவர்னர் யாசிர் அல் ருமாயனும், சிஇஓவாக டோனி டக்லஸும் நியமிக்கப்பட்டனர்.
இலக்கு!
2030 ஆம் ஆண்டுக்குள் 100 க்கும் மேற்பட்ட இடங்களை இணைக்க ரியாத் ஏர்லைன் விமான நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் விமான சேவையில் பெரும் போட்டி உருவாகியுள்ளது.
சீக்ரெட் டீல்ஸ்!
சென்ற ஆண்டு அக்டோபரில் சவுதி அரசு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏறக்குறைய 40 ஏ350 ஜெட் விமானங்களை ஆர்டர் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விமானங்களின் மதிப்பு 30 பில்லியன் டாலராகும்.
சவுதி அரசு
சவுதி அரசுக்கு சொந்தமான Saudia என்னும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் புதிய விமான நிறுவனத்திற்கு விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியது மட்டும் அல்லாமல் விரைவாக முடிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் வருமானம்!
சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஏர்லைன் மூலம் 20 பில்லியனை டாலர் வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியாத் ஏர் உருவாக்கப்படுவது மூலம் சுமார் 200,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications