வெளிநாட்டு ஊழியர்கள் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சவுதி அரேபியா அனுமதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபியா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சியினை மேலும் அதிகரிக்க வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களைச் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.

 நோமு

நோமு

நோமு என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் முதலீடு செய்யலாம் என்று சவுதி கேப்பிட்டல் சந்தை அதிகாரசபையின் தலைவர் முகம்மது எல்குயிஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

 தகுதி வரம்புகள் நீக்கம்

தகுதி வரம்புகள் நீக்கம்

வெளிநாட்டு ஊழியர்கள் நோமு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது, வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதற்காக உள்ள தகுதி வரம்புகள் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி ஏன்?

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி ஏன்?

எண்ணெய் துறை மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்கவே சவுதி அரேபியா பங்கு சந்தையில் வெளிநாட்டு ஊழியர்களை முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.

எப்போது இந்தத் திட்டம் துவங்கப்பட்டது?

எப்போது இந்தத் திட்டம் துவங்கப்பட்டது?

மத்திய கிழக்கு நாடுகளின் மிகப் பெரிய பங்குச் சந்தையை வைத்துள்ள சவுதி அரேபியா சிறு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்க இந்த நோமு திட்டத்தினை ஒரு வருடம் முன்பு அறிமுகம் செய்தது. இப்போது அதில் முதலீடு செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

பட்டியலிடப்படும் நிறுவனங்கள்

பட்டியலிடப்படும் நிறுவனங்கள்

நோமு திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் லாப கணக்கினை காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறுவனத்தின் மதிப்பு 10 மில்லியன் ரியாலும், குறைந்தபட்சம் ஒரு வருடமும் வர்த்தகம் செய்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நோமுவின் கீழ் பட்டியலிடப்படும்.

ஸ்மால் கேப் பங்குகள் என்றால் என்ன?

ஸ்மால் கேப் பங்குகள் என்றால் என்ன?

ஸ்மால் கேப் பங்குகள் என்பது பெயருக்கு ஏற்றார் போலச் சிறு நிறுவனங்களின் பங்குகள் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க். அதே நேரம் நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடைந்தால் லாபமும் அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia openly allows foreign employees as investors in Small cap funds

Saudi Arabia openly allows foreign employees as investors in Small cap funds
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X