செல்வ செழிப்பான சவுதி அரேபியாவுக்கே இந்த கதியா! பில்லியன் கணக்கில் கடன் வாங்க இருக்கிறார்களா? ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸே, இன்னும் என்ன பிரச்சனைகளை எல்லாம் கிளப்ப இருக்கிறாய் என உலக பொருளாதாரத்தை கெஞ்சிக் கேட்க வைத்திருக்கிறது கொரோனா லாக் டவுன்.

 

அந்த அளவுக்கு கொரோனா வைரஸால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் சவுதி அரேபியா பிரச்சனை.

இந்த ஜனவரி 2020-ல் கூட, "சவுதியில் பணப் பிரச்சனை" எனச் சொல்லி இருந்தால்.. நம்மைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். ஆனால் இப்போது அங்கு பணப் பிரச்சனை இருக்கிறதாம்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

உலக அளவில் அதிகம் கச்சா எண்ணெய் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் முன் வரிசையில் சவுதி அரேபியாவும் ஒன்று. இன்று உலகில் கச்சா எண்ணெய் சப்ளையிலும் சவுதி டாப் 5 நாடுகளில் ஒன்று. சுருக்கமாக, கச்சா எண்ணெய் ராஜாக்களில் இந்த சவுதி அரேபியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை, இந்த ராஜாவையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

கடந்த ஜனவரி 2020-ல் இருந்தே கச்சா எண்ணெய் விலை சர சரவென சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 2020-ல் சுமாராக 65 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, இன்று சுமாராக 21 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வருவாய் டவுன்
 

வருவாய் டவுன்

இப்படி கச்சா எண்ணெய் விலை பாலைவனம் போல வறண்டு இருப்பதால் எண்ணெய் வழியாக, சவுதி அரேபியாவுக்கு வரும் வருவாயும், கடந்த ஆண்டை விட 24 % சரிந்து இருக்கிறதாம். கொரோனா லாக் டவுனால் எண்ணெய் அல்லாத வருவாய்களும் சுமார் 17 % சரிந்து இருக்கிறதாம்.

விளைவுகள்

விளைவுகள்

இப்படி அரசுக்கு வர வேண்டிய வருவாய் எல்லாம் சரிந்து இருப்பதால், தன் பட்ஜெட் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சவுதி அரேபிய அரசு, தன் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்து சமாளித்துக் கொண்டு இருக்கிறதாம். இப்படி, கடந்த மார்ச் 2020-ல் மட்டும், அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து, சுமார் 27 பில்லியன் டாலர் (100 பில்லியன் ரியால்) செலவழித்து இருக்கிறார்களாம்.

அந்நிய செலாவணி வீழ்ச்சி

அந்நிய செலாவணி வீழ்ச்சி

மேலே சொன்னது போல அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து தன் பட்ஜெட் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளத் தொடங்கி இருப்பதால், கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் வரலாறு காணாத அளவுக்கு 464 பில்லியன் டாலராக, சவுதி அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்து இருப்பதாக ப்ளூம்பெர்க் செய்திகள் சொல்கின்றன.

கடன் தான்

கடன் தான்

ஏற்கனவே முதல் காலாண்டில் அரசுக்கு 34.1 பில்லியன் ரியால் பட்ஜெட் பற்றாக்குறை இருந்தது. அதை கடன் வாங்கி சமாளித்து இருப்பதை, சவுதி அரேபிய அரசின் நிதி அமைச்சக தகவல்கள் உறுதி செய்வதாகச் சொல்கிறது ப்ளும்பெர்க். இப்போது மீண்டும் பட்ஜெட் பற்றாக்குறைக்கு சவுதி அரசு என்ன செய்யப் போகிறது..?

அழுத்தம் அதிகரிக்கும்

அழுத்தம் அதிகரிக்கும்

"சவுதி அரேபியாவுக்கு இது மிகவும் சிக்கலான தருணம். சவுதி மேலும் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து பணம் எடுப்பார்கள் என நினைக்கிறோம். இரண்டாம் காலாண்டிலும் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடுகள் இருப்பதால், சவுதி அரேபியாவுக்கு அழுத்தம் அதிகரிக்கும்" என்கிறார் மோனிகா.

கடன் தான் ஒரே வழி

கடன் தான் ஒரே வழி

மேலும் பேசியவர் "சவுதி அரேபிய அரசு, இன்னும் நிறைய கடன் வாங்கி, தன் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிப்பதைக் குறைப்பார்கள்" எனச் சொல்லி இருக்கிறார் அபு தாபி கமர்ஷியல் வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுநர் மோனிகா மாலிக்.

நிதி அமைச்சர்

நிதி அமைச்சர்

சவுதி அரேபிய அரசின் நிதி அமைச்சர் முகம்மது அல் ஜதான் (Mohammed Al-Jadaan) அவர்களும் சவுதி அரபு அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் பயன்படுத்தமாட்டோம். சவுதி அரேபியா, இந்த ஆண்டு, மொத்தமாக சுமார் 220 பில்லியன் ரியாலை கடன் வாங்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.

கடன் பளு

கடன் பளு

ஏற்கனவே, சவுதி அரேபிய அரசு, இந்த ஆண்டில், சர்வதேச கடன் சந்தைகளில் சுமார் 19 பில்லியன் டாலரை திரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் 220 பில்லியன் ரியால் கடன் கேட்டு வருவேன் என்கிறது சவுதி அரேபியா. அப்படி என்றால் சவுதி அரேபியா, இந்த கொரோனாவாலும், கச்சா எண்ணெய் விலை சரிவாலும், எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi arabia planning to boost borrowings to 220 Bn riyal

The crude oil king Saudi Arabia is going to boost its borrowings to 220 billion riyal to manage the budget deficits and not to use the foreign exchange reserves. Finance minister of Saudi Arabia muhammed al jadaan confirmed it.
Story first published: Wednesday, April 29, 2020, 15:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X