சவுதி அரோபியா-வின் பிரம்மாண்ட திட்டம் NEOM.. 80 பில்லியன் டாலர் ஒத்துக்கீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் மட்டுமே நம்பிக் கொண்டு தனது நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் நிலையில், புதிய வர்த்தகத்தையும், நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் புதிதாக ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

 

சவுதி அரேபியா உலக நாடுகள் உடன் போட்டிப்போடுவது மட்டும் அல்லாமல் சக வளைகுடா நாடுகள் உடனும் போட்டிப்போட்டு வருகிறது. கச்சா எண்ணெய் மட்டுமே நம்பி இருக்கும் அனைத்து நாடுகளும் புதிதாக வருமானம் ஈட்ட அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் உருவான திட்டம் தான் சவுதி அரேபியாவின் NEOM.

ரஷ்யா-விடம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!ரஷ்யா-விடம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

சவூதி அரேபியா

சவூதி அரேபியா

சவூதி அரேபியா அரசு சுமார் 300 பில்லியன் ரியால் அதாவது 80 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தனது கனவு திட்டமான NEOM-க்கு ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் இத்திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEOM திட்டம்

NEOM திட்டம்

இது மட்டும் அல்லாமல் இந்த முதலீட்டுத் தொகை ஒதுக்கீடு மூலம் NEOM பகுதியில் அமைக்கப்படும் அல்லது செயல்பட ஒப்புக் கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் இந்தப் பணத்தை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது சவுதி அரேபியா அரசு.

முகமது பின் சல்மான்
 

முகமது பின் சல்மான்

நியோம் திட்டத்திற்கான முதலீடாகத் தற்போது 300 பில்லியன் ரியால் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் இது 400 பில்லியன் ரியால் வரையில் விரிவாக்கப்படலாம் என்று இளவரசர் முகமது பின் சல்மான் Jeddah-வில் நடந்த முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

முதல் முறையாக

முதல் முறையாக

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான கட்டுமான திட்டங்களில் ஒன்றாக விளங்கும் NEOM-க்கு சவுதி அரேபியா எவ்வாறு நிதியளிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதைப் பற்றிய விவரங்களை இளவரசர் முகமது பின் சல்மான் முதல் முறையாகத் தெரிவித்துள்ளார்.

 1.2 டிரில்லியன் ரியால்

1.2 டிரில்லியன் ரியால்

NEOM திட்டத்தின் முதல் பகுதியே 2030 வரையில் நடக்க உள்ளது, இத்திட்டத்திற்காகச் சுமார் 1.2 டிரில்லியன் ரியால் அளவிலான தொகை தேவைப்பட உள்ளது. இந்தப் பெரும் நிதி செலவில் பாதியை சவுதி அரசின் சவ்ரின் வெல்த பண்ட் ஏற்றுக்கொள்ள உள்ளது. இதேபோல் மீதமுள்ள 600 பில்லியன் டாலர் தொகையைப் பிற சவ்ரின் வெல்த பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு உள்ளதாக முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

3வது பெரிய பங்குச்சந்தை

3வது பெரிய பங்குச்சந்தை

மேலும் முகமது பின் சல்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில் எங்களுக்கு உலகிலேயே 3வது பெரிய பங்குச்சந்தையாகச் சவுதி அரேபியா விளங்க வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கு உள்ளதாகப் பேசினார். இதேபோல் NEOM திட்டத்தின் ஐபிஓ 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

NEOM திட்டம் 2017

NEOM திட்டம் 2017

NEOM திட்டம் என்பது சவுதி அரேபியாவின் பாலைவன பகுதியில் பெல்ஜியம் நாட்டின் பரப்பளவுக்கு இணையாக ஒரு ஹை டெக் பகுதியை அமைக்க உள்ளது. இத்திட்டம் மூலம் நகர வாழ்க்கை முறையை மொத்தமாக மாற்ற உள்ளார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். இத்திட்டம் 2017ல் உருவாக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: saudi arabia mbs neom
English summary

Saudi arabia Prince MBS set aside $80 billion investment fund for NEOM megaproject

Saudi arabia Prince MBS set aside $80 billion investment fund for NEOM megaproject சவுதி அரோபியா-வின் பிரம்மாண்ட திட்டம் NEOM.. 80 பில்லியன் டாலர் ஒத்துக்கீடு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X