கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், விற்பனையிலும் பெரும் ஆதிக்கம் செய்யும் எண்ணெய் ஜாம்பவான் என அழைக்கப்படும் சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சவுதி அரச குடும்பம் எடுத்த அந்த ஒரு முடிவு தான்.
2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் சவுதி அரேபியா நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அளவு -4.5 சதவீதமாக குறைந்துள்ளது என செவ்வாய்க்கிழமை அந்நாட்டு அரசின் முதல்கட்ட ஆய்வு தரவுகள் கூறுகிறது. இந்த சரிவுக்கு முக்கியமான காரணம் சவுதி அரச குடும்பம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த அந்நாட்டின் உற்பத்தியை தானாக முன்வந்து குறைத்தது தான்.

செப்டம்பர் காலாண்டில் சவுதி அரேபியா நாட்சின் எண்ணெய் சார்ந்த வர்த்தகம் மற்றும் செயல்பாடுகள் பெரிய அளவில் சரிந்துள்ளது. OPEC அமைப்பில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைந்தது.
இதில் சவுதி அரேபியா தானாக முன்வந்து ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் பேரல் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்து இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளுக்கு சுமார் 9 மில்லியன் பேரலாக இருக்கும் என்று சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பர் மாதம் ரஷ்யாவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை 300,000 பேரல் குறைக்கும் என்று சவூதியின் அறிவிப்புக்குப் பின் தெரிவித்தது.
இதன் எதிரொலியாக சவுதி அரேபியா நாட்டின் எண்ணெய் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 17.3 சதவீதம் சரிந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் எண்ணெய் அல்லாத துறை 3.6 சதவீதமும், அரசின் செயல்பாடுகள் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்த போதிலும் அந்நாட்டின் ஜிடிபி -4.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் மூலம் 2023ல் சவுதி அரேபியா நாட்டின் ஜிடிபி -0.8 சதவீதமாக இருக்கும் என அபுதாபி வர்த்தக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனரான மோனிகா மாலிக் கணித்துள்ளார். சவுதி நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு டிசம்பர் மாதம் வரையில் தொடரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் கச்சா எண்ணெய் சார்ந்து மட்டுமே இருக்கும் காரணத்தால் இதை மாற்ற வேண்டும் என்ற முக்கிய திட்டத்துடன் அந்நாட்டு அரசு விஷன் 2030 என திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ் எண்ணெய் அல்லாத துறையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications