சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாட்டில் மதிப்பு கூட்டு வரியை அமலாக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், டிசம்பர் 31 இரவு முதல் இதை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் முக்கியமான வர்த்தகம் சந்தை மற்றும் வேலைவாப்புகளை அதிகளவில் உருவாக்கும் சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் வரியில்லா வாழ்க்கை முறை 2017 உடன் முடிவடைந்துள்ளது.
சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இனி மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், சேவைக்கும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரிச் செலுத்தியாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் விலை
இப்புதிய வரியின் வாயிலாகப் புத்தாண்டு தினத்தில் சவுதியில் பெட்ரோல் விலை 127 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் வாகன உரிமையாளர்களை அலறவைத்துள்ளது.
2 வருட போராட்டம்
கடந்த இரண்டு வருடமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதனால் வளைகுடா நாடுகள் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதன் காரணமாகத் தற்போது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வாயிலாக மதிப்பு கூட்டு வரியை அறிமுகம் செய்துள்ளது.
21 பில்லியன் டாலர்
இப்புதிய வரி அறிவிப்பின் மூலம் 2018ஆம் ஆண்டில் கூடுதலாக 21 பில்லியன் டாலர் வரையிலான வரியை வருமானமாகச் சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நாட்டின் ஜிடிபியில் 2 சதவீதம்.
துபாய்
இப்புதிய வரியால் துபாயில் நடக்கும் சர்வதேச விற்பனையில் இந்த வருடம் குறைவான வரவேற்பு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது.
4 முக்கிய நாடுகள்
சவுதி மற்றும் ஐக்கிய அரேபிய நாடுகளைத் தொடர்ந்து பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கும் தங்களுக்கான வரியை 2019ஆம் ஆண்டுக்குள் முடிவு செய்து நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications