துபாய்: உலகின் மிக அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் துண்டாக, முதல் இடத்தில் இருக்கும் நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்றால் நம்புவீர்களா..?
அந்த நிறுவனத்தின் பெயர் சவுதி அராம்கோ. இந்த கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனம் தான் சுமாராக 111 பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்து முதலிடத்தில் இருக்கிறது.
இப்போது இந்த நிறுவனம் தன் பங்குகளை தன் நாட்டுப் பங்குச் சந்தைகளில் வெளியிட்டு எத்தனை கோடி ரூபாய் திரட்டி இருக்கிறது தெரியுமா..?
ஐபிஓ
சவுதி அராம்கோ நிறுவனம் தன்னுடைய 1.5 சதவிகித பங்குகளை, ஒரு பங்கு விலை 8.53 டாலருக்கு என, ஐபிஓ (IPO - Initial Public Offering) வழியாக டடாவுல் (Tadawul) பங்குச் சந்தைகளில் விற்று 25.6 பில்லியன் டாலர் நிதி திரட்டி இருக்கிறது. 25.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகளை வாங்க, சுமார் 119 பில்லியன் டாலர் கொடுத்து அளவுக்கு அதிகமாக விண்ணப்பித்து இருக்கிறார்களாம்.
உலக சாதனை 1
உலகிலேயே இதுவரை ஆப்பிள், கோக கோலா, அமேசான், அலிபாபா போன்ற எந்த நிறுவனமும் சவுதி அராம்கோ நிறுவனத்தைப் போல 25.6 பில்லியன் டாலர் நிதியை பங்குச் சந்தைகளில் திரட்டியது இல்லை. எனவே தற்போது சவுதி அராம்கோ பங்குச் சந்தையில் 25.6 பில்லியன் டாலரைத் திரட்டி, நிதி உலகில் ஒரு புதிய சாதனை படைத்து இருக்கிறது.
சந்தை மதிப்பு
ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் வரும். இந்த எல்லாம் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பும் ஏறத் தாழ 1 ட்ரில்லியன் டாலர் தான் வரும். ஆனால் சவுதி அராம்கோவின் மொத்த சந்தை மதிப்பு சுமாராக 1.7 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது.
உலக சாதனை 2
எனவே, சவுதி அராம்கோ நிறுவனம், டடாவுல் சந்தையில் (சவுதி அரேபிய பங்குச் சந்தையின் பெயர்) பட்டியலிடப்பட்ட பின், உலகிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களை பட்டியல் போட்டால், எல்லா நிறுவனங்களையும் ஓரம் கட்டிவிட்டு, சவுதி அராம்கோ நிறுவனம் முதல் இடத்தில் வந்து அசால்டாக அமரும்.


Click it and Unblock the Notifications