சவுதியில் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அராம்கோ நிறுவனம், தனது மிகப்பெரிய அளவிலான செலவினை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அராம்கோ, அதன் அடுத்த ஆண்டு மூலதன செலவினத்தினை 25 பில்லியன் டாலர் அல்லது அதற்கும் குறைவாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக இதனையறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அராம்கோவின் செலவினங்கள் பெரும்பாலனவை ஆய்வு மற்றும் உற்பத்திக்காக செலவிடப்படுகின்றன. ஆக இந்த செலவினங்களில் பெரும்பாலானவைகளை குறைக்க சவுதி அராம்கோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செலவினைக் குறைக்க வேண்டிய கட்டாயம்
மேலும் இந்த செலவு குறைப்புகள் குறைந்தது 2023 வரையில் இதே மட்டத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த விஷயத்தினை இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. கொரோனா வைரஸ் லாக்டவுனினால் எண்ணெய் விலையானது வீழ்ச்சி கண்டாலும், தெஹ்ரானை தளமாகக் கொண்ட நிறுவனம், 75 பில்லியன் டாலர் ஈவுத் தொகையை வழங்குவதற்கான உறுதிமொழியை கடைபிடிப்பதால், செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
செலவு குறையும்
எனினும் இந்த ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட capex 25 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரம்பிலேயே இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் கடந்த ஞாயிற்றுகிழமையன்று தெரிவித்தார். இதற்கு பின் சில திங்களுக்கு பின்னர் 2021ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 40 பில்லியன் டாலர் முதல் 45 பில்லியன் டாலர் வரையிலான வழிகாட்டுதல்களில் கணிசமான அளவு குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எதிர்கால திட்டங்கள்
இந்த நிலையில் தான் 2021ம் ஆண்டிற்கான மூலதன செலவினங்களை மதிப்பாய்வு செய்துள்ளோம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வணிக மற்றும் நிதி இலக்குகளின் அடிப்படையில் எதிர்கால திட்டங்களை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளது.
இயல்பு நிலை திரும்ப கணிசமான காலம் ஆகும்
உண்மையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இனி வரும் மாதங்களிலும் எரிபொருள் தேவையான இயல்பு நிலைக்கு திரும்ப கணிசமான காலம் ஆகும். இதனால் கச்சா எண்ணெய் தேவையானது குறையவே வாய்ப்புகள் நிறைய உள்ளது. இதன் காரணமாக உற்பத்தியினை அதிகரித்தாலும் பயனில்லை என்பதால், நிறுவனங்கள் இப்படி செலவு குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications