உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலையானது இன்னும் என்னவாகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. குறிப்பாக ஒபெக் நாடுகளின் முடிவை அடுத்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் பெரும் தலைவலியை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ வட ஆசியாவில் உள்ள சுமார் 4-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மே மாதத்திலும் முழு ஒப்பந்த அளவிலான கச்சா எண்ணெயை பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது ஒபெக் நாடுகளின் உற்பத்தி குறைப்புக்கு மத்தியிலும் இந்த தகவலானது வெளியாகியுள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியினை குறைக்க உள்ளதாகவும், அதிகமாக உற்பத்தி செய்யாது எனவும் இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பினை கொடுத்தன. இந்த சூழலில் இப்படி ஒரு தகவல்கள் எண்ணெய் இறக்குமதியாளர்கள் மத்தியில் ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையரான சவுதி அரேபியா, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. குறிப்பாக பல்வேறு ஆசிய நாடுகளுக்கு இறக்குமதி செய்து வருகின்றது.

இப்படி சூழலில் சவுதி அரேபியா தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையையும் தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்த்தியுள்ளது.
எனினும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சவுதி அரேபியா வட ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் என சுட்டிக் காட்டியுள்ளது. வட ஆசியாவினை பொறுத்தவரையில் சீனா, ஜப்பான், மங்கோலியா, தென் கொரியா, வட கொரியா மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஆக இந்த எண்ணெய் சப்ளையால் இந்தியாவுக்கு பலன் இல்லை என்றே கூறலாம். அதேசமயம் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் புதிய ஒப்பந்தங்களை சமீபத்திய காலமாக போட்டு வருகின்றது. மொத்தத்தில் இந்தியாவில் தற்போதைக்கு பிரச்சனை இல்லை என்றே கூறலாம். இது மேற்கொண்டு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்கலாம். இது இந்தியாவில் விலையினை கட்டுக்குள் வைக்க உதவலாம். எனினும் இது தொடர்ந்து நீட்டிக்குமா? என்பது தான் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications