துபாய்: இந்தியாவின் முக்கியமான பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனம் தனது முழு 2019ம் ஆண்டுக்கான லாபத்தில் 21% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனம் ஒரு முழு ஆண்டில் அதாவது 2019ம் ஆண்டில் அதன் நிகர லாபத்தில் 21% வீழ்ச்சி கண்டுள்ளது. மாபெரும் எண்ணெய் ஜாம்பவான சவுதி அராம்கோ கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்பு தான் இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளது.
எனினும் நடப்பு ஆண்டில் இதனை கட்டுபடுத்த அதன் மூலதன செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பங்கு சந்தையில் பட்டியல்
இந்த நிலையை சமாளிக்கவும், நிறுவனத்தின் உற்பத்தியை மேம்படுத்தவும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் இந்த நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்தில் 29 பில்லியன் டாலர் பங்கு விற்பனையின் பின்னர், பட்டியலிடப்பட்ட நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மாபெரும் நிறுவனம், அதுவும் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட பின்னர் இப்படி ஒரு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகர வருவாய்
நிகர வருவாய் (சிறுபான்மை நலன்கள் உள்பட அதன்) 330.7 பில்லியன் ரியால்ஸ் (88 பில்லியன் டாலர்) மட்டுமே கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 416.5 பில்லியன் ரியால்ஸ் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மொத்த வருவாய் 1.11 டிரில்லியன் ரியால்ஸ்Vs 1.19 ரியால்ஸ் என்ற விகிதத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செயல்பாட்டு லாபம்
இதே செயல்பாட்டு லாபம் 674.9 பில்லியன் ரியால்ஸ் ஆகும். இது முந்தைய ஆண்டு 798.4 பில்லியன் ரியால்ஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நிலவி வரும் விலை ஏற்ற இறக்கத்தினால் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உற்பத்தியை சீரமைக்கவும் இந்த நிறுவனம் 25 - 30 பில்லியன் டாலரினை செலவிடவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
விலை யுத்தத்துக்கு திட்டம்
கடந்த ஆண்டில் மூலதன செலவு 32.8 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டில், அதாவது 2108ல் 35.1 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் விலை குறைப்பை தடுக்க, ரஷ்யா ஒத்துழைப்பு கொடுக்காமையால், விலையுத்தத்தினை கொண்டு வர சவுதி அராம்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் வழக்கத்தினை விட எண்ணெய் உற்பத்தி அதிகமாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
விலை சற்று குறைந்தது
ஓபெக் நாடுகளுடன் இணைந்த மற்ற நாடுகள் கடந்த ஆண்டு உற்பத்தியை குறைத்திருந்த நிலையிலும் கூட, நிலவி வரும் மந்தமான நிலையின் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி மீண்டும் குறைக்கப்பட்ட பின்னர் தற்போது எண்ணெய் விலை வீழ்ச்சி சற்றே தடுக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கடந்த 2019ல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையின் சராசரி பேரலுக்கு 64.12 டாலராக இருந்தது. இது அதிகபட்சமாக 71.67 டாலர் வரை அதிகரித்து இருந்தது. அதே நேரல் 2019ல் கச்சா எண்ணெய் உற்பத்தி சராசரியாக ஒரு நாளைக்கு 9.83 மில்லியன் பேரல்களாக உற்பத்தி செய்திருந்தது. இது முந்தைய 2018ம் ஆண்டில் 10.65 மில்லியன் பேரல்களாக கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications