கச்சா எண்ணெய் விநியோகம்.. சீனாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் சவுதி அராம்கோ..!

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் விற்பனை நிறுவனமான சவதி அராம்கோ அடுத்த 50 வருடத்திற்குச் சீனாவின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது என அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நசீர் சீன வளர்ச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சீனா மற்றும் சவுதி அராம்கோ நிறுவனங்களுக்கு மத்தியிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிற்குக் கச்சா எண்ணெய் விநியோகம்

சீனாவிற்குக் கச்சா எண்ணெய் விநியோகம்

2021ஆம் ஆண்டில் முதல் 2 மாதம் சீனாவிற்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாகச் சவுதி அரேபியா விளங்குகிறது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சீனாவிற்குச் சவுதி அராம்கோ ஏற்றுமதி செய்துள்ள கச்சா எண்ணெய் அளவு 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளுக்கு 1.86 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளியது சீனா

ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளியது சீனா

இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் சவுதி அரேபியா, ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி சீனாவின் கச்சா எண்ணெய் சப்ளையர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2020ல் உற்பத்தி குறைப்பு, வர்த்தகப் பாதிப்பு எனப் பல தடைகளைத் தாண்டி சீனாவிற்கு அதிகளவிலான கச்சா எண்ணெய்-ஐ உற்பத்தி செய்து பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சவுதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நசிர்,

சவுதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நசிர்,

இந்நிலையில் வீடியோ கான்பிரென்சிங் முறையில் பேசிய சவுதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நசிர், சீனாவின் எனர்ஜி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும், இது அடுத்த 5 வருடத்திற்கான திட்டமல்ல அடுத்த 50 வருடத்திற்கும் அதற்கும் அதிகமான காலத்திற்கும் இந்த முன்னுரிமை தொடரும் எனத் தெரிவித்தார்.

கிரீன் எனர்ஜி பரிமாற்றம்

கிரீன் எனர்ஜி பரிமாற்றம்

உலகில் கிரீன் எனர்ஜி பரிமாற்றம் மிகவும் அவசியம் என்றாலும், நிலையான எரிசக்தி தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. எண்ணெய்க்கு மாற்றாக ஒரு நிலையான எரிசக்தி உருவாகச் சில வருடங்கள் கட்டாயம் ஆகும் எனச் சவுதி அராம்கோ சிஇஓ அமின் நசிர் தெரிவித்தார்.

சவுதி அராம்கோ முதலீடு

சவுதி அராம்கோ முதலீடு

இதுமட்டும் அல்லாமல் சவுதி அராம்கோ நிறுவனம் சீனாவில் கனரகப் போக்குவரத்து, கெமிக்கல், லூப்ரிக்கென்ட் ஆகிய பிரிவில் சீனாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+