சர்வதேச நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக கச்சா எண்ணெய் நுகர்வானது, குறைந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையானது தரை தட்டியது.
இதனால் விலையினை கட்டுப்படுத்தும் விதமாக ஓபெக் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியினை குறைத்தன. இந்த நிலையில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை, ஒபெக் நாடுகள் மே மற்றும் ஜூன் மாதத்திலும், மீண்டும் உற்பத்தி குறைப்பினை நீட்டிக்க வேண்டும். இதற்கு சவுதியும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது எண்ணெய் விலையை ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வு குறையலாம்
தற்போது பல நாடுகளிலும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் நுகர்வானது மீண்டும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
உற்பத்தி குறைப்பு
நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே கச்சா எண்ணெய் விலையானது சற்று வலுவாக காணப்பட்டது. இந்த நிலையில் ஒபெக் மற்றும் நட்பு நாடுகளின் உற்பத்தி குறைப்பானது மேலும், கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த மே மாத கூட்டத்தில் மீண்டும் ஒரு உற்பத்தி குறைப்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தேவை மீண்டு வரவில்லை
ஏனெனில் தேவை மீண்டு வரவில்லை. ஆக விலையை மீண்டும் சரியும் முன்பு, அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கருதுகின்றன. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டே ஒபெக் நாடுகள் ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தியை குறைத்தன. இது சர்வதேச உற்பத்தியில் 10% ஆகும்.
கச்சா எண்ணெய் விலை
எனினும் ரஷ்யா இந்த சமயத்தில் உற்பத்தியினை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது இன்று WTI கச்சா எண்ணெய் விலையானது 0.23% குறைந்து, 61.42 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.23% குறைந்து, 64.78 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
பெட்ரோல், டீசல் விலை
இதற்கிடையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையானது, கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை - ரூ.90.56
மும்பையில் பெட்ரோல் விலை - ரூ.96.98
சென்னையில் பெட்ரோல் விலை - ரூ.92.58
பெங்களூரில் பெட்ரோல் விலை - ரூ.93.59
ஹைத்ராபாத்தில் பெட்ரோல் விலை - ரூ.94.16
டெல்லியில் டீசல் விலை - ரூ.80.87
மும்பையில் டீசல் விலை - ரூ.87.96
சென்னையில் டீசல் விலை - ரூ.85.88
பெங்களூரில் டீசல் விலை - ரூ.85.75
ஹைத்ராபாத்தில் டீசல் விலை - ரூ.88.20
More From GoodReturns

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications