கச்சா எண்ணெய் விலை 3 வருட உச்சத்தை அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விற்பனை சூடுப்பிடித்துள்ள காரணத்தால் சவுதி மற்றும் பிற அரபு நாடுகள் கொரோனா முந்தைய காலக்கட்டத்தை விடவும் அதிகளவிலான வருமானத்தை பெற துவங்கியுள்ளது.
இதன் மூலம் கொரோனா காலத்தில் சவுதி அரேபியா எதிர்கொண்ட வர்த்தக பாதிப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதன்மையாக இருக்கும் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அளவீட்டை பெரிய அளவில் குறைத்தது.
எரிபொருள் தேவை
கொரோனா தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது உலக நாடுகள் முழுவதும் எரிபொருள் தேவை ஓரே நேரத்தில் அதிகரித்துள்ள காரணத்தால் கொரோனாவுக்கு முந்தைய அளவான ஒரு நாளுக்கு 9.8 மில்லியன் பேரல் அளவில் உற்பத்தி செய்துள்ளது.
வேகமாக டெலிவரி
மேலும் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை வேகமாக டெலிவரி செய்யும் பணிகளையும் சவுதி துவங்கியுள்ள காரணத்தால் வர்த்தகம் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. ஒருப்பக்கம் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் வரையில் அதிகரித்துள்ளது, மறுப்புறம் கச்சா எண்ணெய்-க்கான டிமாண்ட்-ம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி அதிகரிக்கப்பட்ட நிலையிலும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
3 வருட உச்சம்
இதனால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தக வருவாய் 3 வருட உயர்வை தொட்டு உள்ளது, இதனால் 2022 முடிவில் மிகப்பெரிய தொகையை வருமானமாக பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது.
OPEC+ அமைப்பு
OPEC+ அமைப்பு நாடுகளுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது, உற்பத்தி, ஏற்றுமதி, விலை அனைத்தும் சாதகமாக அமைந்துள்ளது என எண்ணெய் வர்த்தக நிறுவனமான Trafigura Group-ன் தலைவர் பென் லாக்காக் தெரிவித்துள்ளார்.
முக்கிய கூட்டம்
இதற்கிடையில் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு மற்றும் இதர முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய OPEC அமைப்பில் இருக்கும் 23 நாடுகளும் வருகிற திங்கட்கிழமை கூட உள்ளது. இக்குழுவில் சவுதி மற்றும் ரஷ்யா தான் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் அதிக வருமானத்தை பார்க்க சவுதி துவங்கியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியில் எவ்விதமான மாற்றமும் செய்யாது என கணிக்கப்படுகிறது. இதனால் சந்தையில் டிமாண்டு அதிகரிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்ப்பு.
இந்தியா
இதனால் கச்சா எண்ணெய்-காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு விலைவாசி மற்றும் பண்டிகை கால வர்த்தகம் குறித்து எவ்விதமான திட்டமும் இல்லாமல் தொடர்ந்து அதிகப்படியான வரியின் கீழ் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது, இதனால் சாமானிய மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications