Serena Williams-க்கு வாழ்த்துக்கள்! பிரசவ காலத்தில் பெண்களைக் காப்பாற்ற ரூ. 20 கோடி முதலீடு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டென்னிஸ் என்றால் நமக்கு சானியா மிர்சா தான் நினைவுக்கு வருவார். ஆனால் உலக பெண்கள் டென்னில் என்றால் Serena Williams என்கிற இமய சாதனையாளர், நம் கண் முன் வந்து நிற்பார்.

 

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோமானிய நாட்டைச் சேர்ந்த சிமோனா ஹலெப்பிடம் வெறும் 56 நிமிடம் போராடி தோற்றார் Serena Williams.

ஆனால் அதை விட பெரிய சாதனை ஒன்றைச் செய்திருக்கிறார் Serena Williams. இப்போது தன்னைப் போன்ற பெண்களுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் இறப்பு விகிதத்தை தீர்க்க ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் Serena Williams.

50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது

சொத்து பத்து

சொத்து பத்து

23 க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, உலக மகளிர் டென்னிஸின் ராணியாக இன்று வரை வலம் வரும் 37 வயது Serena Williams-ன் சொத்து பத்துக்கள், பிராண்ட், பெயர் என எல்லாம் சம்பாதித்தது இந்த டென்னிஸை வைத்து தான். தன் டென்னிஸை வைத்து சம்பாதித்த பணத்தில் எப்போதும் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு செலவழித்து வருகிறார். இந்த முறை அவர் பணத்தை முதலீடு செய்திருக்கும் நல்ல காரியம், பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களைக் காப்பாற்றுவதற்கு பயன்படப்போகிறதாம்.

ஸ்டார்ட் அப் நிறுவனம்

ஸ்டார்ட் அப் நிறுவனம்

Serena Williams முதலீடு செய்திருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர் Mahmee. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இன்றைய நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு (Data analysis) செய்து பிரசவ காலத்தில் பெண்கள் இறப்பதை குறைக்க முயற்சிக்குமாம். குறிப்பாக கருப்பின பெண்களின் இறப்பைக் குறைக்க உதவும் என்கிறார்கள். இந்த நல்ல காரியத்துக்கு மார்க் க்யூபன் என்கிற பெரிய பில்லியனரும், உதவிக் கரம் நீட்டி இருக்கிறாராம்.

சொந்த அனுபவம்
 

சொந்த அனுபவம்

Serena Williams கூட தன் மகள் ஒலிம்பியாவை பெற்றெடுத்த பின் இது போன்ற உடல் உபாதைகளை சந்தித்திருப்பதாகச் சொல்கிறார். ஒலிம்பியாவை பெற்றெடுத்த பின், தன் வயிற்று பகுதியில் தையல் போடப்பட்டு ஓய்வில் இருக்கும் போது, நுரையீரல் பகுதியில் ஒரு ரத்தக் கட்டு ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து இருமல் வர, தன் வயிற்றுப் பகுதி தையல் பிரிந்து விட்டது. ஆகையால் மீண்டும் அறுவை சிகிச்சைக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தான் என் ரத்தக் கட்டை நீக்கினார்கள் எனச் சொல்லி பயமுறுத்துகிறார் நம் Serena Williams.

postpartum காலம்

postpartum காலம்

ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் முதல் ஆறு வாரங்களைத் தான் postpartum காலம் என்பார்கள். இந்த ஆறு வார காலத்தில் தான் தாயின் கருப்பை சுருங்குதல், ஹார்மோன்களில் மாற்றம் என பல மாற்றங்கள் நடக்கும். இந்த காலத்தில் தாய் உடல் நலம் மோசமடைந்து பல பெண்கள் இறந்திருக்கிறார்களாம். இப்படி அமெரிக்காவில் பிரசவ காலத்தில் இறந்த தாய்மார்களின் எண்ணிக்கை மட்டும் 700 பேர் என்கிறது ஒரு அரசு அறிக்கை. இந்த 700 பேரில் 420 பேரின் இறப்பைத் தடுத்திருக்க முடியும் என்று சொல்கிறார்கள். இப்போது இந்த இறப்பு விகிதத்தை குறைக்கத் தான் Serena Williams மஹிமே என்கிற ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்திருக்கிறார்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

Serena Williams ஏற்கனவே செரீனா வெஞ்சர்ஸ் என்கிற பெயரில் சுமார் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறாராம். Coinbase நிதி சார் மென்பொருள், Billie பர்சனல் கேர், Brandless இ காமர்ஸ், Tonal ஃபிட்னெஸ், Lola பர்சனல் கேர், Daily Harvest உணவு, Floravere ஆடைகள், Impossile உணவு, Honey Love ஆடைகள்... என பல துறை சார் நிறுவனங்கள்ல் முதலீடு செய்திருக்கிறாராம் இந்த உலக சாம்பியன்.

சக பெண்களின் வலியை உணர்ந்து அவர்கள் உயிருக்காக முதலீடு செய்த Serena Williams-ஐ வாழ்த்துவோமே ப்ரண்ட்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Serena Williams invested rs 20 crores to save maternity mortality

Serena Williams invested rs 20 crores to save maternity mortality
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X