உலகளாவிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் வங்கி கட்டமைப்புகளை மீண்டும் வலிமையாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது சுவிஸ் வங்கிகள். இதற்கு மத்தியில் தான் பணபுழக்க நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை 3 பில்லியன் சுவிஸ் பிராங்க் தொகை வாங்கியது UBS.
சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் வங்கியை அந்நாட்டின் மாபெரும் வங்கியான UBS கைப்பற்றியது மூலம் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த கைப்பற்றலை சுவிஸ் மத்திய வங்கியே நேரடியாக களத்தில் இறங்கி முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் UBS - கிரெடிட் சூயிஸ் கூட்டணி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, கிரெடிட் சூயிஸ்-ஐ நிர்வாகம் செய்ய UBS தனது முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Sergio Ermotti ஐ மீண்டும் CEO பதவியில் பணியமர்த்துவதாக UBS Group AG அறிவித்துள்ளது.
நம்பிக்கையான ஊழியர்கள்
ஒரு நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் கட்டாயம் நம்பிக்கையான ஊழியர்கள் உயர்மட்ட நிர்வாகத்தில் இருக்க வேண்டியது கட்டாயம், அந்த வகையில் UBS Group சமீபத்தில் கைப்பற்றிய கிரெடிட் சூயிஸ்-ஐ நிர்வாகம் செய்ய UBS தனது முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Sergio Ermotti-ஐ மீண்டும் சிஇஓ-வாக நியமித்துள்ளது.
Ralph Hamers வெளியேற்றம்
இதன் மூலம் நவம்பர் 1 2020 முதல் UBS சிஇஓ-வாக இருக்கும் Ralph Hamers தற்போது Ermotti வருகை மூலம் வெளியேறுகிறார். UBS வங்கியின் சிஇஓ-வாக Ralph Hamers-க்கு கடைசி வேலை நாள் ஏப்ரல் 4, Ermotti இப்பதவியில் 5 ஆம் தேதி வருகிறார்.
Sergio Ermotti நியமனம்
2011 முதல் 2020 வரை UBS இன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய Sergio Ermotti, தற்போது Swiss Re நிறுவனத்தில் சேர்மன் பதவியில் உள்ளார். வங்கியின் தொடர்ச்சியான ஊழல்கள் மற்றும் இழப்புகளுக்கு மத்தியில் வங்கியை வழிநடத்திய பெருமைக்குரியவர்.
கிரெடிட் சூயிஸ் வங்கி
தற்போது கிரெடிட் சூயிஸ் வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, கிரெடிட் சூயிஸின் முதலீட்டு வங்கி செயல்பாடுகளை குறைப்பது மற்றும் வங்கியின் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு UBS பாதுகாப்பாக உள்ளது என்று நம்பிக்கை அளிக்கும் வேலையை Sergio Ermotti கையில் கொடுக்கப்பட்டு உள்ளது.
UBS வங்கி சேர்மன்
UBS வங்கியின் தற்போதைய சேர்மன் ஆன Colm Kelleher, 2009 சர்வதேச நிதியியல் நெருக்கடி காலத்தில் Sergio Ermotti-யின் சிறப்பான நிர்வாகம் மூலம் UBS மிகப்பெரிய வங்கியாக உயர்ந்தது மட்டும் அல்லாமல் வலிமையான வங்கியாகவும் உயர்ந்தது என பாராட்டினார். இவருடைய நியமனம் மிகவும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications