சாதாரணமாக ஒரு கவுன்சிலர் பதவியில் இருந்தால் கூட நம் ஊர் பகுதிகளில் சிலரின் அலப்பறைகள் தாங்க முடியாது. எது எடுத்தாலும் அதனை செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவது. விளம்பரப்படுத்துவது என இருக்கும்.
ஆனால் ஒரு நாட்டின் இளவரசராக இருந்து கொண்டு பொதுப் போக்குவரத்தில், மக்களோடு மக்களாய் பயணித்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
யார் அந்த இளவரசர்? பல்லாயிரம் கோடிகள் சொத்து இருந்தும் ஏன் அப்படி? அரச பரம்பரியை சார்ந்த ஒருவர் எப்படி பொது போக்குவரத்தில் பயணம்? வாருங்கள் பார்க்கலாம்?
இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும்
துபாயின் இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் லண்டன் தெருக்களிலும், பொதுப்போக்குவரத்தினையும் பயன்படுத்தி பயணிப்பதை சமூக வலைதளங்கள் மூலம் காண முடிகிறது.
இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் அவ்வப்போது தனது அரசு குடும்பம் தொடர்பான சில கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு அவ்வப்போது வெளிவருவது வழக்கமான ஒன்று.
லண்டனுக்கு சுற்றுப்பயணம்
தற்போது தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து லண்டனுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர் பொதுவெளியில் மக்களோடு மக்களாக கலந்து, பொதுவெளியில் செல்லும் புகைப்படங்களையும் பார்க்க முடிகிறது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருக்கின்றார்.
எளிமையாய் மெட்ரோவில் பயணம்
இளவரசர் தனது நண்பருடன் மெட்ரோ ரயில் பயணித்துக் கொண்டு இருப்பதும், இதில் சாதாரண மக்களோடு கலந்து சாதாரணமாக பயணிப்பதும் பார்ப்பரோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது அவருடன் பயணிக்கும் அவர் ஒரு இளவரசர் என்பதும் தெரியாமல் ரயிலில் நின்று கொண்டு பயணித்து வருவதையும் காண முடிகிறது.
செல்வ செழிப்புள்ள நாடு
இன்றும் உலகில் செல்வ செழிப்பு மிக்க நாடான ஐக்கிய அமீரகத்தில், தனி நபர் வருமானமும் அதிகம். இப்படி ஒரு சூழலில் அரச குடும்பம் எனும் போது சொல்லவே வேண்டாம். ஆனாலும் அரச குடும்பமாக இருந்தாலும் இளவரசரின் எளிமை மக்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்த ஒன்றாக உள்ளது.
சொத்து மதிப்பு
இவரின் சொத்து மதிப்பு சுமார் நிலவரப்படி 6 பில்லியன் டாலராக உள்ளது. இவரின் மாத வருமான, 40 மில்லியன் டாலருக்கும் மேல் என கூறப்படுகிறது. இவரின் சம்பளம் 500 மில்லியன் டாலருக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் துபாயின் பட்டத்து இளவரசராக இருந்து வருகின்றார். இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications