உலகையே கதற வைத்த கொரோனா.. சிங்கப்பூரையும் விடல.. ஏப்ரல் 7 முதல் லாக்டவுன்!

சிங்கப்பூர் பற்றிய அறிந்திருக்க முடியாதவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், மிக நாகரீகமான சுத்தமான சுகாதாரத்தினை பின்பற்றும் ஒரு நாடாகும்.

ஆனால் அங்கேயேயும் கொரோனாவின் தாக்கம் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது.

இன்று காலையில் கொரோனாவின் தாக்கத்தினால் 5-வது நபர் உயிரிழந்ததாக, அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

அடுத்த வாரம் முதல் லாக்டவுன்

அடுத்த வாரம் முதல் லாக்டவுன்

கிட்டதட்ட 1000 பேருக்கு இந்த கொரோனாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 7 முதல் அரசாங்கம் பள்ளிகளையும், பெரும்பாலான பணியிடங்களை மூட திட்டமிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மற்றும் சில முக்கிய பொருளாதார நிலையங்கள் தவிர அனைத்தும் மூடப்படும்.

தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை

தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை

மேலும் அடுத்த வாரத் தொடக்கத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான கூடுதல் தூண்டுதல் நடவடிக்கைகளையும் அரசாங்கம் வெளியிடும். சமீபத்திய வாரங்களில் சிங்ப்பூரில் உள்ளுர் தொற்று அதிகரித்துள்ள நிலையில், இனியும் தொற்று அதிகரிக்காமல் இருக்க இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்து வருகிறது சிங்கப்பூர் அரசு.

இவையெல்லாம் தற்காலிகமாக மூடல்

இவையெல்லாம் தற்காலிகமாக மூடல்

கேசினோஸ், தீம் பார்க்குகள் என அடுத்த வாரம் தொடக்கம் முதல் மூடப்பட்டிருக்கும். எனினும் உணவகங்கள், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், பயன்பாடுகள், போக்குவரத்து மற்றும் முக்கிய சேவைகள் திறந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் இருக்கும்

இதெல்லாம் இருக்கும்

அதுமட்டும் அல்ல ஏப்ரல் 7 முதல் உணவகங்கள், ஹாக்கர் மையங்கள், காபி கடைகள், நீதிமன்றங்கள் மற்றும் பிற உணவு பான விற்பனை நிலையங்கள் எம்ன அனைத்தும் டெலிவரி மட்டுமே செய்ய முடியும். மேலும் உலகளாவிய வினியோக சங்கிலிகளாக இருக்கும் பிற பொருளாதார துறைகள் மூடப்படாது. அனைத்து குழந்தை மற்றும் மாணவர் பராமரிப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்.

ஊக்குவிப்பு நடவடிக்கை

ஊக்குவிப்பு நடவடிக்கை

இதற்கிடையில் கடந்த வாரமே 33.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டாவது தூண்டுதல் தொகுப்பினை வழங்கியது. மந்த நிலைக்கு செல்லும் பொருளாதாரத்தினை மேம்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக மேற்கண்ட இத்தகைய நடவடிக்கைகள் வைரஸ் மேற்கொண்டு அதிகமாக பாரவுவதை கட்டுப்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+