கொரோனா வைரஸின் அடுத்த டார்கெட் சிங்கப்பூரா?

கொரோனா வைரஸுக்கு இனி உலகத்தில் யாருமே இண்ட்ரோ எழுதத் தேவை இல்லை. அந்த அளவுக்கு கொடிய நோயாக உலகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது.

சீனாவில் இதுவரை சுமாராக 1,350 பேர் இந்த கொடூர நோயால் மரணமடைந்து இருக்கிறார்கள்.

அதோடு சீனாவில் மட்டும், சுமாராக 60,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

அதற்குள் சிங்கப்பூர் பக்கம் தன் மரண பார்வையைக் காட்டி இருக்கிறது கொரோனா வைரஸ். சீனா என்கிற நாட்டைத் தாண்டி, அதிக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் ஒன்று. சிங்கப்பூரில் நேற்று மதிய கணக்குப் படி சுமாராக 58 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படு இருக்கிறார்களாம்.

மக்கள் தொகை

மக்கள் தொகை

இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டார்களில், 15 பேர் குணமாகிவிட்டார்கள் என, அவர்களை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகமே சொல்லி இருக்கிறதாம். சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் கொரோன பாதிப்பை ஒப்பிட்டால், ஒரே ஒரு நல்ல விஷயம் தான். இதுவரை கொரோனாவால் சிங்கப்பூரில் யாரும் இறக்கவில்லையாம். சிங்கப்பூரில் மொத்தம் 57 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனதளவில் தயாராக வேண்டும்

மனதளவில் தயாராக வேண்டும்

இதுவரை, சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் மரணம் சம்பவிக்கவே இல்லை என அலட்சியமாக இருக்க முடியாது. மரணத்தை கூட எதிர் கொள்ளும் அளவுக்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது எனச் சொல்லி இருக்கிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர்.

தயாராக இருக்க வேண்டும்

தயாராக இருக்க வேண்டும்

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary) "இப்போதே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று பேசுவது மிகவும் முன் கூட்டி பேசுவதாக் இருக்கும். தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் நிறைய நோயாளிகள் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் தான் இருக்க வேண்டும்" என எச்சரிக்கையோடு இருப்பதாகவே பேசி இருக்கிறார்.

சீனாவால் அடி

சீனாவால் அடி

சிங்கப்பூர் ஒரு திறந்த வெளிப் பொருளாதாரம் என்பதால், aவர்க பொருளாதாரம், நிறைய வர்த்தகங்கள் மற்றும் சுற்றுலாவை நம்பித் தான் நாடே இருக்கிறது. அதிலும் சீனா தான், சிங்கப்பூரின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையே. அதோடு, சீனாவில் இருந்து தான் நிறைய சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருவார்களாம்.

எல்லாம் கொரோனா தான்

எல்லாம் கொரோனா தான்

கொரோனா வைரஸால் கிட்டத் தட்ட, சீனாவே பெரிய அளவில் வியாபாரங்களும் வர்த்தகங்களும் செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கிறது எனும் போது, சிங்கப்பூரின் பொருளாதாரம் அடி வாங்காதா என்ன..? அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறதாம். இந்த அடியை சமாளிக்க, சிங்கப்பூர் அரசு சில நல்ல சலுகைகளை வழங்கி இருக்கிறார்களாம்.

கொரோனாவால் சலுகைகள்

கொரோனாவால் சலுகைகள்

1. சிங்கப்பூரில் சுற்றுலா வாசிகளை நம்பி இருக்கும் ஹோட்டல்கள், டிராவல் ஏஜெண்ட்கள், சுற்றுலா கைடுகள் என இவர்கள் செலுத்த வேண்டிய லைசன்ஸ் கட்டணங்களை ரத்து செய்து இருக்கிறார்களாம்.
2. அதோடு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நபர்கள் அல்லது கொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டவர்கள் தங்கி இருந்த அறைகளை சுத்தம் செய்யும் செலவில் ஒரு பகுதியையும் அரசே ஏற்று இருக்கிறதாம்.
3. டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் தனி நபர் டிரைவர்கள்.

தாங்காது

தாங்காது

ஒரு நாட்டில் கொரோனா கொலை வெறி ஆட்டம் ஆடுவது போதாதா..? இப்போது சிங்கப்பூரையும் சின்னா பின்னமாக்க வேண்டுமா..? கொரோனாவுக்கு இறக்கம் இருந்தால், சிங்கப்பூரையாவது விட்டு வைக்கட்டும். இதற்கு மேலும் கொரோனா கோர தாண்டவம் ஆடத் தொடங்கினால் உலகம் தாங்காது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+