வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கும் விதமாகவும், திறன் அதிகமுடைய ஊழியர்கள் மட்டும் தன் நாட்டில் பணி செய்ய அனுமதி அளிக்கவும் அமெரிக்கா ஹெச்1பி விசாவில் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
சிங்கப்பூர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வொர்க் பர்மிட்-ஐ வழங்கத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டுக்களை விதித்து வருகிறது சிங்கப்பூர். இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை சிங்கப்பூரில் உள்ளது.
பிரபலம்
நிதி திரட்டல் மற்றும் வரி விதிப்பு கொள்கையின் மூலம் சிங்கப்பூர் ஹோல்டிங் நிறுவன கலாச்சாரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகவும் பிரபலம். உதாரணமாகப் பிளிப்கார்ட்.
முன்பு ஹோல்டிங் நிறுவனங்களைச் சிங்கப்பூரில் துவங்குவது மிகவும் எளிதாக இருந்த நிலையில் தற்போது அதிகக் கட்டுப்பாடுகள், அதிகக் கட்டணம், அதிகக் காலம் தேவைப்படுகிறது.
வேலைவாய்ப்பு
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகச் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு நிறுவனத்தில் இருக்கும் சிங்கப்பூர் ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், குடியுரிமை பெற்ற ஊழியர்கள் எனப் பல்வேறு காரணிகளைக் கவனித்து வருகிறது.
எம்பிளாய்மென்ட் பாஸ்
திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற வேண்டுமென்றால் எம்பிளாய்மென்ட் பாஸ் மூலம் பணியாற்றலாம். இதைவாங்க குறைந்தபட்சம் 3,600 சிங்கப்பூர் டாலர் சம்பளமாகப் பெற வேண்டும்.
இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.6 லட்சம் ரூபாய். இது 2014ஆம் ஆண்டில் 3,300 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ் பாஸ்
மிட்லெவல் ஊழியர்கள் எஸ் பாஸ் வழியாகப் பணியாற்றலாம். இதற்குக் குறைந்தபட்சம் சம்பள அளவு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 2,300 டாலராக உயர்த்தியுள்ளது சிங்ப்பூர் அரசு.
புதிய மாற்றம்
சிங்கப்பூர் அரசின் வேலைவாய்ப்புத் தளத்தில் 14 நாட்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து விளம்பரம் செய்யத் தனது நிறுவனத்தில் குறைந்தது 10 ஊழியர்கள் 15,000 சிங்கப்பூர் டாலருக்குக் குறைவான சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
குறைந்தபட்சம் சம்பளம்
அமெரிக்கா தடாலடியாக ஹெச்1பி விசாவிற்காகக் குறைந்தபட்சம் சம்பள அளவை உயர்த்திய நிலையில் சிங்கப்பூர் குறைவான அளவிலேயே சம்பள அளவுகளை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் கணிசமான பாதிப்புகளை இந்திய ஊழியர்களும், இந்திய நிறுவனங்களும் சந்திக்கும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications