மொபைல் விற்பனையில் 12 பில்லியன் டாலர் வருவாய்!! அசத்தலான வளர்ச்சியில் ஜியோமி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சீன மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஜியோமி நிறுவனம் துவங்கிய வெறும் 5 வருடங்களே ஆன நிலையில் இந்நிறுவனம் உலகில் பல நாடுகளில் விற்பனைக்காக கால் பதித்தது. இதன் மூலம் இந்நிறுவனம் குறைந்த காலத்திலேயே 12.2 பில்லியன் டாலர் வருவாய் என மிகப்பெரிய இடத்தை அடைந்ததுள்ளது.

 

61.1 மில்லியன் மொபைல்போன்கள்

61.1 மில்லியன் மொபைல்போன்கள்

இந்நிறுவனத்தின் வளை பகுதியில், ஜுன் லெய் செய்த பதிவுகளின் படி இந்நிறுவனம் 2014ஆம் ஆண்டில் 61.1 மில்லியன் மொபைல்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது கடந்த வருடத்தை விட 227 சதவீதம் அதிகமாகும்.

வருவாய்

வருவாய்

நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 135 சதவீதம் உயர்ந்து 74.3 பில்லியன் யூவான் ஆதாவது 12.2 பில்லியன் டாலராக உள்ளது.

சாம்சங்

சாம்சங்

அதுமட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சீனா மொபைல் விற்பனையில் இந்நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் ஜியோமி
 

இந்தியாவில் ஜியோமி

இந்நிறுவனம் இந்தியாவில் 1 மில்லியன் ஆதாவது 10 இலட்சம் மொபைல் போன்களை வெற்றிகரமாக விற்பனை செய்த நிலையில், ஜியோமி உலகின் பிற நாடுகளிலும், தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் மொபைல் விற்பனைக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து பிளிப்கார்ட் விற்பனை தளம் தான்.

காப்புரிமை வழக்கு

காப்புரிமை வழக்கு

மேலும் இந்தியாவில் விற்பனை செய்த ஜியோமி மொபைல்கள் சிலவற்றில், சுவிடன் நாட்டின் எரிக்சன் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எரிக்சன் காப்புரிமை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கிற்கான விசரணை நடந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smartphone maker Xiaomi doubled its revenue to $12 billion in 2014

The chairman of Chinese smartphone brand Xiaomi says its sales more than doubled last year to $12.2 billion.
Story first published: Monday, January 5, 2015, 10:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X