செம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா..!

கடந்த 2020ம் நிதியாண்டில் சீனாவில் உள்நாட்டு ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, முந்தைய ஆண்டை விட 20.4% வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் 372 மில்லியனில் இருந்து, 2020ல் 296 மில்லியனாக இருந்தது.

சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் புள்ளிவிவரங்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த ஆண்டில் விநியோக சங்கிலி மற்றும் தேவை கொரோனாவினால் மிக மோசமான பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக விற்பனை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு

விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு

கடந்த 2019லியே ஸ்மார்ட்போன் இறக்குமதி 4% சரிந்துள்ளது. சீனாவின் வேகமாக விரிவடைந்து வரும் 5ஜி நெட்வொர்க்குகளுடன் இணக்கமான, புதிய தொலைபேசிகளை நுகர்வோர் வாங்கியதால், இந்த ஆண்டு புதுபிக்கப்பட்ட விற்பனையை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் ஹேண்ட்செட் விற்பனையாளர்கள் 2020க்குள் நுழைந்தனர். ஆனால் விற்பனையாளர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக கடந்த ஆண்டின் முதல் பாதியில் இருந்தது.

சீன நிறுவனங்கள் பாதிப்பு

சீன நிறுவனங்கள் பாதிப்பு

ஏனெனில் உள்நாட்டு பிராண்டுகளான ஒப்போ, விவோ மற்றும் சியோமி கார்ப் ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பலத்த சரிவினையே கண்டது. எனினும் சீனாவின் முன்னணி பிராண்டான ஹீவாய் தனது பிராண்டினை வளர்த்துக் கொண்டது. எனினும் பிந்தைய பாதியாண்டில் அமெரிக்கா, சீன நிறுவனங்களின் மீது விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக ஹூவாயின் விற்பனை மந்த நிலையை சந்தித்தது.

மூலதன பொருட்கள் தட்டுப்பாடு

மூலதன பொருட்கள் தட்டுப்பாடு

அதோடு முக்கிய மூலதன பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒப்போ, விவோ மற்றும் சியோமி ஆகியவை அந்த இடத்தினை நிரப்பும் முயற்சியில் ஈடுப்பட்டன.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி போன்களை வெளியிட்ட நிலையில், அதற்கான வரவேற்புகள் அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிளின் விற்பனையானது நேர்மறையான வளர்ச்சியினை கண்டுள்ளது.

 

சீனாவின் பங்கு இழப்பு

சீனாவின் பங்கு இழப்பு

ஆக இப்படி பல்வேறு காரணங்களுக்கு மத்தியில், சீனாவின் ஏற்றுமதி வணிகமானது பாதிக்கப்பட்டது. அதோடு பல நாடுகளும் சீன பொருட்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா சீனாவின் சில நிறுவனங்களையே தடை செய்துள்ளது. இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்களுக்கு மத்தியில் சீனாவின் ஏற்றுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+