உலகளவில் குறிப்பாக அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் ஐடி துறைகளில் வேலை வாய்ப்பு கிடைப்பது தற்போது குதிரைக்கொம்பாக இருப்பதாக தொடர்ந்து தரவுகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது நாள்தோறும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்கள் 70% வரை குறைந்திருப்பதாக ரெவிலியோ லேப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் தேவை என நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் அளவு 70% வரை குறைந்திருக்கிறது என கூறி இருக்கிறது.

வைட் காலர் எனப்படும் அலுவலகத்தில் அமர்ந்து செய்யப்படும் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்களும் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது என தெரிவித்துள்ளது. இது தவிர பிசினஸ் அனலிட்ஸ், மார்க்கெட் ரிசெர்ச்சர், டெலிவரி மேனேஜர் வேலைகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களும் கணிசமான அளவு குறைந்து இருக்கிறதாம். மேலும் அமெரிக்காவில் நுழைவு நிலையில் வேலைக்கு வரக்கூடிய ஊழியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படாமலேயே இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
ஆனால் ப்ளூ காலர் வேலைகளில் அதாவது உடல் உழைப்பு சார்ந்து செய்யப்படுகின்ற வேலைகளில் சம்பள உயர்வு அதிகரித்திருக்கிறது. எனவே அண்மையில் டெக் பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்குள் நுழைந்துள்ள இளைஞர்கள் கடினமாக காலத்டஹி எதிர்கொண்டுள்ளனர் என கூறுகிறது.
பாரம்பரியமாக தங்களுக்கு தெரியக்கூடிய மென்பொருள் மேம்பாடு மட்டுமில்லாமல் இந்த துறை சார்ந்து நாள்தோறும் வரக்கூடிய அப்டேட்டுகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். கிளவுட் உள்கட்டமைப்பு , சைபர் செக்யூரிட்டி மற்றும் ஏஐ ஆகிய மூன்று துறைகளிலும் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்வது வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
படிப்பை முடித்து முதன்முறை வேலைக்கு வருபவர்கள் பெரிய அளவில் சம்பளத்தை எதிர்பார்க்காமல் குறிப்பிட்ட இடம்தான் வேண்டும் என இல்லாமல் தொடக்கத்தில் நெகிழ்வு தன்மையோடு வேலைக்கு சென்றால் படிப்படியாக இதில் முன்னேறி வரலாம் என கூறுகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு சந்தையை முடக்கி விட்டது என கருத கூடாது என தெரிவிக்கும் நிபுணர்கள் உலக வைட் காலர் மற்றும் டெக் அடிப்படையிலான வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகிறது என கூறுகின்றனர்.
இது ஒரு திருத்தம் தான் என்றும் ஊழியர்கள் அடுத்தடுத்த வரக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து தங்களுடைய திறன்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறுகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பங்களின் வருகை காரணமாக அது சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications