எலக்ட்ரிக் கார் அறிமுகமான நாளில் இருந்து காலம் காலமாக ஆட்டோமொபைல் துறையில் இருந்த முன்னணி நிறுவனங்கள் ஓரம்கட்டப்பட்டு உள்ளது. இத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பல நிறுவனங்கள் இவி தொழில்நுட்பத்தில் பெரிய அளவிலான முன்னேற்றமும் அடையமுடியாமல் ஒரு ஆவரேஜ் நிறுவனமாக திகழ்கிறது.
ஈவி கார் வாங்கும் மக்களும் பாரம்பரியமான நிறுவனங்களை விரும்பாமல் புதிதாக வந்த நிறுவனங்களை அதிகம் விரும்புகின்றனர். உதாரணமாக சீனாவில் ஸ்மார்ட்போன் தயாரித்து வந்த ஹூவாய், சியோமி தற்போது கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னோடியாக இருந்து வருகிறது. இதன் பாதையில் தற்போது சோனியும் வர உள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த சோனி மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் கூட்டு முயற்சியான சோனி ஹோண்டா மொபிலிட்டி, புதிய எலக்ட்ரிக் கார் ஆஃபீலாவை அறிமுகப்படுத்த உள்ளது. இது 2026இல் வெளியாகும் என தெரிகிறது.
இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால் பிளேஸ்டேஷன் ரிமோட் ப்ளே வசதி இதில் இருக்கும் என்பது தான். இதன் மூலம் பயணிகள் PS5 அல்லது PS4 கேம்களை காரில் விளையாட முடியும். காரின் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஆடியோ அமைப்புடன் முழுமையாக இணைக்கப்பட்டு பயணிகளுக்கு மேம்பட்ட கேமிங் அனுபவம் தரும் என்று சோனி கூறியுள்ளது. சோனி இதை முழு இம்மர்ஷிவ் அனுபவமாக வடிவமைத்துள்ளது. கேமிங் ரசிகர்களுக்கு இது பெரிய ஈர்ப்பு.
ஆஃபீலா (Afeela) எலக்ட்ரிக் கார் அமெரிக்காவில் 102,000 டாலர் ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.91.4 லட்சம்) தொடக்க விலையில் விற்பனையாகும். ப்ரீபுக் செய்ய 200 டாலர் செலுத்த வேண்டுமாம். 91 kWh பேட்டரி பேக் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
91 kWh பேட்டரி பேக் இருக்கும் காரணத்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 மைல்கள் அதாவது 482 கி.மீ தூரம் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த கார் இந்தியாவில் வெளியீட வாய்ப்புகள் மிகவும் குறைவு.
உண்மையில் காரில் பிளேஸ்டேஷன் கேமிங் புதிதல்ல. 2003இல் டாடா சஃபாரி லிமிடெட் எடிஷனில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட பிளேஸ்டேஷன் 2 இருந்தது. டெஸ்லா கார், சமீபத்தில் அறிமுகமான டாடா சியாரா கார்களிலும் கேம் விளையாடும் வசதிகள் உள்ளது. இதனால் சோனியின் தொழில்நுட்பம் இந்த ஹோண்டா காரில் எந்த அளவுக்கு சிறப்பாக பொருந்தும், மேம்பட்டதாக இருக்கும் என்பது தெரியவில்லை.
இதேபோல் சோனி உடனான கூட்டணி ஹோண்டா கார்களில் நீண்ட கால பிரச்சனையாகவும், குறையாகவும் இருக்கும் தொழில்நுட்ப மேம்பாடு வசதிகள் மெருகேற்றப்படலாம் என தெரிகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications