இந்தியா- ரஷ்யா மத்தியிலான நட்புறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில், கச்சா எண்ணெய் தாண்டி அணுசக்தியில் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்திற்கும், உலக நாடுகளுடன் போட்டிப்போடவும் அணுசக்தி கட்டாயம் அவசியம்.
இந்த நிலையில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜித் குமார்-ரின் ரஷ்ய பயணமும், ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனமான Rosatom தலைவருடனான சந்திப்பும் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாடாமின் தலைவர் அலெக்சி லிக்காச்சேவ், இந்தியாவை முக்கிய பங்குதாரர் என்று வியாழக்கிழமை (மே 24) அன்று கூறினார். மேலும் அவர், இந்தியாவுக்கு இந்த கோடை காலத்தில், அடுத்த தலைமுறை அணுசக்தி எரிபொருள் கிடைக்கும் என்று அறிவித்தார் என ரஷ்யா டுடே (RT) செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அணு பாதுகாப்பு தொழில்நுட்பம்: சைபீரியாவின் டாம்ஸ்க் (Tomsk) பகுதியில் ரஷ்ய அணுசக்தித் தலைவர் லிக்காச்சேவ், இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜித் குமார் மோஹன்டி-ஐ வரவேற்றார். அணுசக்தி வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பான அணு உலைக் கருவியை (atomic reactor)கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை தளத்தை மோஹன்ட்டிக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், Rosatom நிறுவனத்தின் தலைவர் லிக்காச்சேவ், அணுசக்தி துறையில் இந்தியா, நம்நாட்டின் ஒரு முக்கிய பங்குதாரர் என்று பாராட்டினார். இதற்கு முன்னதாக வியாழக்கிழமை, டாம்ஸ்க் பகுதியில் உள்ள செவர்ஸ்க் நகரில் மோகான்ட்டி மற்றும் ரோசாடாமின் தலைவர் ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.
ரஷ்யா மற்றும் இந்திய அணுசக்தித் துறை தலைவர்கள், டாம்ஸ்க் பகுதியில் உள்ள செவர்ஸ்க் நகரில் கட்டப்பட்டு வரும் பைலட் டெமான்ஸ்ட்ரேஷன் எனர்ஜி காம்ப்ளக்ஸ் (PDEC) தளத்தைப் பார்வையிட்டனர் . இந்த காம்ப்ளக்ஸ் "Proryv" (ஆங்கிலத்தில் "the Breakthrough") என்ற முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ரஷ்யா மற்றும் இந்திய அணுசக்தித் துறை தலைவர்கள் பயணத்திலும், சந்திப்பிலும், அணுசக்தி துறையில் ரஷ்ய-இந்திய ஒத்துழைப்பின் எதிர்கால பகுதிகள் குறித்து முழுமையான கலந்துரையாடல் நடைபெற்றது.
ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாடாமின் தலைவர் அலெக்சி லிக்காச்சேவ் கூறுவது போல் அடுத்த தலைமுறை அணுசக்தி எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் நாட்டின் இந்தியாவின் அணுசக்தி மின்சார உற்பத்தி அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் தற்போது 22 இயங்கும் ரியாக்டர் உள்ளது, இதன் மூலம் 6780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் 18 ரியாக்டர்கள் Pressurised Heavy Water Reactors (PHWRs) மற்றும் 4 ரியாக்டர்கள் Light Water Reactors (LWRs) ஆகும்.
இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணுசக்தி மின்சார உற்பத்தி 5வது இடத்தில் உள்ளது, மொத்த உற்பத்தியில் வெறும் 3 சதவீதம் மட்டுமே இதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications