கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வேகமாக மீண்டு வரும் நிலையில் அதன் வளர்ச்சிக்குத் தடையாகப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கம் பிரச்சனை இந்தியாவுக்கு மட்டுமா என்றால் நிச்சயம் இல்லை.. அமெரிக்கா, கொரியா, பிரிட்டன் என அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் இந்த பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளும் சந்தையில் பணப்புழக்கத்தைப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி வட்டி விகிதத்தை உயர்த்துவது தான்.
கொரோனா பாதிப்பால் சிதைந்துக்கிடக்கும் பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் நாடுகளின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதார நாடுகளும் இந்த முடிவை எடுக்கத் தயங்கி வந்த நிலையில், தென் கொரியா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தென் கொரியா நாடு
ஆசியச் சந்தையில் மிகவும் முக்கியமான பொருளாதார நாடுகளாக இருக்கும் தென் கொரியாவில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் விலை மற்றும் அதிகரித்து வரும் குடும்பங்களின் கடன் அளவு ஆகியவை கருத்தில் கொண்டும் பணப்புழக்கத்தைக் குறைத்தால் நாட்டின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கும் என்பதை உணர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது தென் கொரியா மத்திய வங்கி.
பேங்க் ஆப் கொரியா வட்டி விகிதம்
இதன் படி பேங்க் ஆப் கொரியா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 0.50 சதவீதமாக இருந்த பென்ச்மார்க் வட்டி விகிதம் தற்போது புதிய உயர்வின் மூலம் 0.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னணி பொருளாதார நாடுகளில் தென் கொரியா தான் முதல் முறையாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா பணவீக்க அளவு
அமெரிக்காவில் பணவீக்க அளவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் பல பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பல முறை முயற்சி செய்தும் நாட்டின் வளர்ச்சி, முதலீட்டுச் சந்தை வளர்ச்சி, டாலர் மதிப்பு உருவான பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்த தயங்கியது. ஆனால் தென் கொரியா அசால்டாக அதிகரித்துள்ளது.
டெல்டா கொரோனா வைரஸ்
இந்நிலையில் தென் கொரியாவில் டெல்டா கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டு வரும் நிலையிலும் தென் கொரியா வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.
பேங்க் ஆப் கொரியா வட்டி உயர்வு வரலாறு
தென் கொரியாவின் மத்திய வங்கியான பேங்க் ஆப் கொரியா கடைசியாகச் செப்டம்பர் 2018ல் வட்டி விகிதத்தை உயர்த்தியது அதன் பின்பு தொடர்ந்து ஒரே வட்டி விகிதம் தான் இருந்தது. கொரோனா தொற்றுக் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்கக் கடந்த ஆண்டு 2020 மே மாதம் வட்டி விகிதத்தை 0.50 சதவீதமாகக் குறைத்தது. கிட்டதட்ட 3 வருடத்திற்குப் பின்பு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது தென் கொரியா மத்திய வங்கி.
4 சதவீதம் பொருளாதார வளர்ச்சி
டெல்டா வகைக் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வேளையில் நடப்பு ஆண்டில் தென் கொரியா சுமார் 4 சதவீதம் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் இந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் விலை உயர்வு
தென் கொரியாவில் வீடுகளின் விலை ஜூலை மாதத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2002க்கு பின்பு இது மிகப்பெரிய உயர்வாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்தால் சாமானிய மக்கள் வாழ்வதற்குக் கூடப் பெரும் பிரச்சனையாக மாறிவிடும் என்பதால் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
குடும்பங்களின் கடன் அளவு
இதேபோல் தென் கொரியா குடும்பங்களின் கடன் அளவு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிடும் எனவும் பேங்க் ஆப் கொரியா தெரிவித்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கு டிமாண்ட்
இதேபோல் தென் கொரியா லாக்டவுன் காலத்தில் ஏற்பட்டு உள்ள எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கான டிமாண்ட் மற்றும் வர்த்தகத்தைக் கணக்குப்போட்டு வட்டியை உயர்த்தியுள்ளது என்றும், இது நீண்ட காலம் இந்த டிமாண்ட் நீடிக்காது எனவும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் தென் கொரியாவின் செயலால் அமெரிக்காவும் தனது வட்டி விகிதத்தை விரைவில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிப் உற்பத்தியில் முதலீடு
ஆனால் தென் கொரியா சிப் உற்பத்தியில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது. இதனால் இந்த வர்த்தகச் சரிவை ஈடு செய்ய முடியும் என நம்புகிறது. இதேபோல் தென் கொரியாவின் ஆட்டோமொபைல் வர்த்தகம் அந்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதும் வட்டியை உயர்த்த மிக முக்கியக் காரணமாக உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications