சியோல், தென்கொரியா: புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை ஏற்கனவே மனிதர்கள் அனுபவிக்க தொடங்கி விட்டோம். பருவம் தவறிய மழை, திடீர் வறட்சி , அதிக வெயில், தண்ணீர் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனைகளை மனிதர்கள் சந்தித்து வருகிறோம். இந்த நிலையில் பருவநிலை மாற்ற பாதிப்பு காரணமாக தென்கொரியா நாடு ஒரு தனித்துவமான பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது.
வினோத பிரச்சினை: தென்கொரியாவில் கடந்த சில மாதங்களாகவே வினோதமான ஒரு பூச்சி கூட்டம் சுற்றி வருகிறது. மக்கள் ஓரிடத்தில் நின்றாலே இந்த பூச்சி கூட்டம் கூட்டமாக வந்து மொய்த்துவிடுகின்றன. கார்கள், இருசக்கர வாகனங்கள், வீட்டின் ஜன்னல்கள் என எங்கு பார்த்தாலும் இந்த பூச்சிகள் ஆக்கிரமித்து இருக்கின்றன என தென்கொரிய மக்கள் புலம்பி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக பூங்காக்கள் மற்றும் மலைபாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இந்த பூச்சிகள் இருக்கின்றன.

லவ் பக்ஸ் என்றால் என்ன?: ஆங்கிலத்தில் இவற்றை Love Bugs என அழைக்கிறார்கள், இதன் அறிவியல்பூர்வமான பெயர் Plecia longiforceps என்பதாகும். இந்த பூச்சிகள் பறக்கும் போதே இணை கொள்ளும் என்பதால் இதனை ஆங்கிலத்தில் Love Bugs என அழைக்கிறார்கள். பொதுவாக இந்த வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் மூன்றில் இருந்து நான்கு நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டவை. பெண் பூச்சிகள் ஒருவாரம் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் இந்த ஒரு வார காலத்திலேயே பெண் பூச்சிகள் நூற்றுக்கணக்கான முட்டைகளை விட்டு செல்லும்.
Lovebugs are really a thing in my neighborhood these days, and it's much worse in a mountain. Is nature sending Koreans, facing a population crisis, a message? pic.twitter.com/GQ63LJ3S4T
— Subin Kim (@SubinBKim) June 29, 2025
சீனாவில் இருந்து வருகை: பொதுவாக இந்த பூச்சிகள் தென்கிழக்கு சீனா, தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தான் அதிகம் காணப்படும். சில சமயங்களில் கால நிலைக்கு ஏற்ப மத்திய அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணங்களில் காணப்படும். ஆனால் இந்த பூச்சிகள் எப்படி தென்கொரியாவுக்குள் வந்தது அதுவும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எப்படி சுற்றுகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கப்பல் மூலம் வந்தது: தென்கொரிய பல்கலைகழகம் இந்த பூச்சியின் வருகை குறித்து நடத்திய ஆய்வில் தென் சீனாவில் இருந்து வந்த கப்பல்களில் ஒட்டி கொண்டு இந்த பூச்சிகள் நாட்டினுள் நுழைந்தது கண்டறியப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகின்றனர். இந்த பூச்சியில் சில மாதங்களிலேயே நாடு முழுவதும் பரவி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

புவி வெப்பமயமாதலே காரணம்: புவி வெப்பநிலை அதிகரித்து வருகிறது எனவே இந்த பூச்சிகள் தென் பகுதிகளில் இருந்து வடக்கு பகுதியை நோக்கி பரவுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிக வெப்பம் கொண்ட பகுதிகளில் இருந்து வெப்பம் குறைவான பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதுவே பெரும்பாலான நகரங்களில் இந்த பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களுக்கு ஆபத்தா?: இந்த வகை பூச்சிகளால் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என தென்கொரிய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இந்த பூச்சிகள் எந்த வகை நோயையும் பரப்பாது மனிதர்களை கடிக்கவும் செய்யாது என்பதால் மக்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என கூறி இருக்கின்றனர் . இருந்தாலும் ஒரு காரை மூடும் அளவிற்கு கூட்டமாக வருவதாகவும் வீட்டின் சுவர்கள், ரயில்கள் ஆகியவற்றின் மீது வந்து ஒட்டிக் கொள்கின்றன என்றும் மக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் .

தென்கொரிய மக்கள் புலம்பல்: மனிதர்கள் மீது ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பூச்சிகள் வந்து அமர்வது அருவருப்பாக இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர். பெரும்பாலான இடங்களில் மக்கள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து இந்த வகை பூச்சிகளை விரட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறு என கூறும் தென்கொரியா அரசு மக்கள் தண்ணீரை அடித்து இந்த பூச்சிகளை விரட்டி அடிக்கலாம் என கூறியுள்ளது. ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
விரட்ட வேண்டாம் என கூறும் அரசு: இதமான கால சூழல் நிலவும் பகுதிகளை நோக்கி இந்த பூச்சிகள் படையெடுக்கின்றனர் என்பதால் இது போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியா அரசாங்கம் பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது என்பதால் மக்கள் இதனை விரட்டி அடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே சில தென்கொரியர்கள் இந்த பூச்சிகளை பிடித்து உணவாக உட்கொள்ளும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன.
இது பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?:
லவ்பக் பூச்சிகள் மூலம் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் அவற்றின் எண்ணிக்கை தொல்லை அளிக்கும் அளவுக்கு உயர்ந்தால் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆட்டோமொபைல் பாதிப்பு: லவ்பக் பூச்சிகளின் அமிலம் வாகனங்களின் பெயின்ட் மற்றும் மேற்பரப்பை சேதப்படுத்தும், குறிப்பாக அவை உடனடியாக அகற்றப்படாவிட்டால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சுக்கள் மூலம் வாகனங்களின் ரேடியேட்டர்கள் அடைப்பதால் எஞ்சின் கூடுதல் வெப்பம் அடையும், இது கார்வாஷ், பழுது பார்ப்பு செலவுகள் மற்றும் வாகன ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கும்.
சுற்றுலா துறை பாதிப்பு: லவ் பக் பூச்சுக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தாவ் தென்கொரியா-வின் சுற்றுலா வருமானம் குறையும் ஆபத்து உள்ளது.
ஹோட்டல் மற்றும் வர்த்தகம்: பெரிய எண்ணிக்கையிலான லவ்பக் பூச்சிகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக உணவகங்களில் உணவு மற்றும் உணவு பொருட்களை கெடுக்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications