சீனாவுக்கு முன் நிலவுக்கு போகனும் - ரூ. 31 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ள பணக்காரரின் ஆசை!
நாசாவுடன் கூட்டணி அமைத்து இருக்கும் ஹூஸ்டனை சேர்ந்த இண்ட்யூடிவ் மெஷின்ஸ் நிறுவனம், நிலவுக்கு அமெரிக்க விண்கலத்தை செலுத்த தயாராகி வருகிறது. அப்போலோ விண்கலத்தை அடுத்து நிலவுக்கு செல்ல இருக்கும் முதல் அமெரிக்க விண்கலம் இது ஆகும்.
கம் கஃபேரியன் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி துறை சார்ந்த கோடீஸ்வரர் ஆவார். விண்வெளி கோடீஸ்வரரான கம் கஃபேரியன் நிலவுக்கு செல்ல வேண்டும் என்பதை நீண்ட நாள் ஆசையாக கொண்டிருக்கிறார்.
சீனா நிலவில் லூனார் ரோவரை களமிறக்க ஆயத்தமாகி வரும் நிலையில், அமெரிக்க விண்வெளி மையம் இந்த மாதம் தனது திட்டத்தை நிலவின் தென் பகுதிக்கு அருகில் மாற்றியது.
கம் கஃபேரியன் யார்?
ஈரானில் பிறந்த கம் கஃபேரியன் ஏற்கனவே 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எக்ஸ் எனர்ஜி நிறுவனத்தை வைத்திருக்கிறார். இந்த நிறுவனம் அணு உலைகளை வடிவமைத்து வருகிறது. இத்துடன் ஸ்பெஷல் பர்பஸ் அக்யூசிஷன் மற்றும் இண்ட்யூடிவ் நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறது.
அசியம் ஸ்பேஸ்
அசியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தில் இவர் இணை நிறுவனராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது சர்வதேச விண்வெளி மையத்திற்கு வர்த்தக ரீதியிலான பயணங்களை வழங்கி வருகிறது. இது தவிர புவியின் சுற்றுப் பாதையின் கீழ்பகுதியில் சொந்தமாக விண்வெளி மையத்தை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.
கம் கஃபேரியன் மதிப்பு
புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி கம் கஃபேரியன் மொத்த சொத்து மதிப்பு 3.8 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.31 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. டெஸ்லாவின் எலான் மஸ்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆகியோரை தொடர்ந்து விண்வெளி ஆய்வில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு முற்றிலும் முரணாக அமையும் வகையில், இவர் வர்த்தக விண்வெளி பிரிவில் அதிக சொத்துக்களை ஈட்டி இருக்கிறார்.
கஃபேரியன் கல்வி விவரங்கள்:
அப்போலோ 11 விண்கலத்தை சிறு வயதில் பார்த்து வியத்த கஃபேரியன் தனது 18 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அமெரிக்காவில் உயர்கல்வி பயின்ற கஃபேரியன் அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பொறியியல் பிரிவில் பாடம் பயின்ற கஃபேரியன் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார்.


Click it and Unblock the Notifications