டெஸ்லா நிறுவனத்தில் துணை தலைவராக இருந்த ஸ்ரீலா வெங்கடரத்தினம் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெஸ்லா நிறுவனத்துடன் சுமார் 11 ஆண்டு காலம் பணிபுரிந்து வந்த அவர் திடீரென அந்த பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.
இது தொடர்பாக தன்னுடைய லின்கிடுன் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ரீலா வெங்கடரத்தினம் நிறுவனத்தில் தன்னுடைய பதவிக்காலம் அசாதாரணமானது என கூறியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பெருமை அடைவதாக கூறியுள்ள அவர் தற்போது 700 மில்லியன் டாலர் கொண்ட நிறுவனமாக டெஸ்லா உருவாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தை பொருத்தவரை அங்கே துணை தலைவராக இரண்டு பெண்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். அவர்களில் ஸ்ரீலா வெங்கட்ரத்தினமும் ஒருவர். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
டெஸ்லா வருடாந்திர வருமானம் 100 பில்லியன் டாலர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலர்களை எட்டிய ஒரு நிறுவனம் மற்றும் ஒரு வருடத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான கார்களை டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தில் துணை தலைவராக இருந்து இருக்கிறேன் என்பது மிகப் பெருமிதமாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் கூட்டாக எவ்வளவு சாதித்து இருக்கிறோம் என்பதை பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது என ஸ்ரீலா வெங்கடரத்தினம் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீலா வெங்கடரத்தினத்தின் பதிவிற்கு டெஸ்லாவின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ஜேசன் வீலர் கருத்து பதிவிட்டுள்ளார். டெஸ்லாவில் வேலை செய்வது எளிமையானது கிடையாது, ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள வெங்கட்ரத்தினம் நிச்சயமாக டெஸ்லா நிறுவனம் சவால்களை விரும்பாதவர்களுக்கான நிறுவனம் கிடையாது எனக் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாகவே டெஸ்லா நிறுவனத்தில் இருந்து பல்வேறு மூத்த அதிகாரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவு பிரிவில் மூத்த துணை தலைவராக செயல்பட்டு வந்த ட்ரியோ பாக்ளினோ கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவர் கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இந்த ஆண்டு வேலையில் இருந்து விலகிவிட்டார்.
அதேபோல பொது கொள்கை மற்றும் தொழில் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவராக இருந்த ரோகன் பட்டேலும் அண்மையில் டெஸ்லாவில் இருந்து விலகினார் . புதிய தயாரிப்புகள் பிரிவுக்கான துணைத் தலைவராக இருந்த ரிச் ஓட்டோவும் பதவியில் இருந்து விலகினார். கடந்த ஏப்ரலில் டெஸ்லா நிறுவனம் பேரை தங்களது ஊழியர்களில் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்கியது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications