இலங்கையில் 29 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு அதிசயம்.. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு வந்த குட் நியூஸ்..!!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இது அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வலிமையைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் குறைக்கப் போராடி வரும் வேளையில் இலக்கையில் தற்போது பணவீக்கம், பணவாட்டமாக மாறியுள்ளது, அதாவது பணவீக்கம் மைனஸ் அளவீட்டுக்குச் சென்றுள்ளது.

இலங்கையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பணவீக்க அளவீடு மிகவும் குறைவான அளவீட்டைப் பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 0.5% ஆக இருந்தது, ஆனால் செப்டம்பரில் எதிர்மறையான 0.5% அதாவது -0.5 சதவீதம் எனப் பணவாட்ட நிலையை அடைந்துள்ளது. இது அடுத்த மாதமும் தொடர்ந்தால் இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.

இலங்கையில் 29 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு அதிசயம்.. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு வந்த குட் நியூஸ்..!!

இதன் மூலம் மக்களுக்குக் குறைவான வட்டியில் கடன் வாங்கி சொத்துகளையும், பொருட்களையும் வாங்க முடியும். இது அந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றால் மிகையில்லை.

செப்டம்பர் மாதம் இலங்கையில் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகிய இரண்டின் பணவீக்கமும் குறைந்துள்ளது மூலம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 0.5 சதவீத பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் -0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இலங்கையில் கடைசியாகப் பணவாட்ட நிலை அதாவது Delfation 1995 மார்ச் மாதத்தில் -0.9% என்ற அளவீட்டைப் பதிவு செய்தது. அதற்கு முன்பு 1985ல் -2.1 சதவீத அளவீட்டைப் பதிவு செய்தது. இந்த நிலையில் 29 ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாகப் பணவாட்ட நிலையை அடைந்துள்ளது.

இதேபோலே இலங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டபோது அந்நாட்டின் பணவீக்கம் 69.8% என்ற அதிர்ச்சியூட்டும் அளவிற்கு உயர்ந்தது, வெறும் 2 வருடத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை மூலம் பணவீக்கம் பணவாட்டமாக மாறியுள்ளது.

2 வருடங்களுக்கு முன்பு பணவீக்கம் உச்சக்கட்ட நிலையில் இருந்து போது அந்நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகளவிலான பற்றாக்குறை இருந்தது. இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான மோசமான ஆட்சி முறை தான், இதன் எதிரொலியாக மக்கள் புரட்சி வெடித்து அவர் நாட்டை விட்டே வெளியேறி 2022 ஜூலை மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ-வை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியை பிடித்து இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் பெற்று இலங்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு தொடர்ந்து செலவின குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியது வாயிலாக 2.9 பில்லியன் டாலர் கடனை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்று இலங்கை பொருளாதாரத்தை மீட்டு எடுத்தார்.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோற்றுப்போனார், இந்த தேர்தலில் அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்ச உடனேயே பணவீக்கம் தொடர்பான முக்கிய தகவலை இலங்கை சென்செஸ் மற்றும் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+