இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆசிய நாடுகளையும் பாதிக்க தொடங்கியுள்ளன. வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் போர் அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையின் தாக்கம் தற்போது இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் சந்தையிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு, கமர்சியல் சிலிண்டருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல், விமான எரிபொருளில் இதுவரையில் எவ்விதமான விலை உயர்வையும் அறிவிக்கவில்லை.

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

ஆனால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பாங்களாதேஷ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது இலங்கையும் இணைந்துள்ளது. இலங்கை அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை திடீரென உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது.

எரிபொருள் விலை திடீர் உயர்வு
இலங்கையின் அரசுக்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Ceylon Petroleum Corporation - CPC) திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு 22 இலங்கை ரூபாய் உயர்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.6.54 ஆகும். இந்த மாற்றத்தால் இலங்கையில் ரீடைல் எரிபொருள் விலை 8 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

அதிகரித்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்
இந்த விலை உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் இலங்கையில் பொதுமக்கள் அதிக அளவில் எரிபொருள் வாங்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன.

எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பலர் தேவைக்கு அதிகமாக எரிபொருள் வாங்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 'பேனிக் பையிங்' நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே விலை உயர்வு அறிவிக்கப்பட்டதாக CPC அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ள அச்சத்தை குறைக்க இலங்கை அரசு முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு ஏப்ரல் மாத இறுதி வரை போதுமானதாக இருப்பதாக CPC தெரிவித்துள்ளது.

எனவே உடனடி விநியோக பற்றாக்குறை ஏற்படும் நிலை இல்லை என்றும், விலை உயர்வு என்பது எதிர்பாராத அளவில் அதிகரித்துள்ள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+