இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் மோசமான நெருக்கடியில் இருக்கிறது, பாகிஸ்தான் நாட்டில் இருந்து பிரிட்டன் நாட்டின் Shell நிறுவனம் வெளியேற முடிவு செய்துள்ளது பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இலங்கை அரசிடம் ஜனாதிபதி தேர்தல் நடத்த கூட பணம் இல்லை என தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையிலும், அந்நாட்டு அரசு கடன் மறுசீரமைப்பில் கவனம் செலுத்த விரும்புவதாலும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அமைச்சரவைப் செய்திதொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்தும் என்ற கருத்து அந்நாட்டில் பரவி வந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் பந்துல குணவர்தன, அரசின் நிதி நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றம் அடையாத காரணத்தால் இந்த ஆண்டு தேர்தலுக்கும் சாத்தியமில்லை என தெரிவித்தார்.
தற்போது இலங்கை அரசின் மொத்த கவனமும், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக முடிப்பதை மையமாகக் கொண்டு உள்ளது எனவும் மக்களுக்கு அமைச்சரவைப் செய்திதொடர்பாளர் பந்துல குணவர்தன விளக்கம் அளித்தார்.
இலங்கை நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. இதற்கு முன்பு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச-வின் பதவி காலம் 2024 நவம்பர் வரையில் இருந்தாலும் மக்கள் போராட்டம், எழுச்சி காரணமாக அந்நாட்டை விட்டு ஓடிவிட்டார்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து புதிய அரசு அமைக்கப்பட்ட பின்பு இலங்கை மக்கள் போராட்டம் முடிவடைந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொண்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் இலங்கை திவாலானதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இருந்து எப்போதும் பார்த்திடாத நிதி நெருக்கடியா அந்நாடு எதிர்கொண்டது, இதில் இருந்து இன்னும் மீள முடியாத காரணத்தால் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அமைச்சரவைப் செய்திதொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications