ஹாங்காங்: இந்தியாவில் பல அன்னிய வங்கி மற்றும் முதலீடு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு மக்கள் மத்தியில் உயர்ந்த இடம் உண்டு. இந்நிலையிவ் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி வருவாய் சரிவின் காரணமாக செலவீண குறைப்பில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனம் தனது உலகளாவிய பங்குசந்தை வர்த்தகத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.
இதுக்குறித்த தகவல்களை இந்நிறுவனத்தின் தலைவர் நிர்வாக அதிகாரியான பீட்டர் சான்ஸ் அவர்கள் வெளியிட்ட மெமோவில் குறிப்பிட்டு இருந்ததாக ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி
ஆசியாவை முக்கிய சந்தையாக வைத்து செயல்படும் இவ்வங்கி வராக் கடன் அதிகரித்துள்ள காரணத்தால் தனது உலகளாவிய உலகளாவிய பங்குசந்தை வர்த்தகத்தில் இருந்து விலகுவதாக விளக்கம் அளித்துள்ளது.
பணியாளர்கள்
இந்நிறுவனத்தின் உலகளாவில் கிளையில் பங்கு சந்தை வர்த்தக பிரிவில் பணியாற்றிய 4,000 பேருக்கு இதன் மூலம் வேலை பரிபோகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவில் இருந்து கடந்த இரண்டு வருடமாக இந்நிறுவனம் வருமான ஈட்ட முடியாமல் தவித்து வந்தது குறிப்பிடதக்கது.
டாப் 10
மேலும் இந்நிறுவனம் பங்குசந்தை வர்த்தகத்தை 2008ஆம் ஆண்டு ஜேபி மோர்கன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கேஸ்நோவ்-யை கைபற்றியதன் மூலம் துவங்கியது. கடுமையான உழைப்பு, புதிய திட்டங்கள் என முறையில் முயற்ச்சி செய்தும் இப்பிரிவில் இருந்து வருமானம் ஈட்ட முடியவில்லை. இதன் மூலம் உலக வங்கிகள் தரவரிசையில் டாப் 10 இடத்தை இந்நிறுவனம் இழந்தது.
செலவு குறைப்பு
இந்நிறுவனம் கடந்த வருடம் 400 மில்லியன் டாலர் நிதியை சேமிக்கவும், செலவீணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.
சில்லறை வர்த்தக பிரிவு
இந்நிறுவனத்தின் சில்லறை வர்த்தக பிரிவில் பணியாற்றும் 4000 பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 2000 பேர் வேலை இழப்பு ஆணை பெற்றதாகவும், மீதமுள்ள 2000 பேருக்கு அடுத்த சில மாதங்களில் வேலை இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது நிர்வாகம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications