அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சீனாவில் தனது பெரும்பான்மை பங்கை 4 பில்லியன் டாலர் மதிப்பிற்கு Boyu Capital என்ற சீன முதலீட்டு நிறுவனத்திற்கு விற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் 2025 மே மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தையின் நீட்சியாக முடிந்தது என இந்நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் CEO-வாக பிரையன் நிக்கோல் தலைமையில் இந்நிறுவனம் மறுசீரமைப்பை தொடங்கிய ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் இந்த விற்பனைக்கு ஆலோசகராக செயல்பட்டது.

ஒரு காலத்தில் ஸ்டார்பக்ஸ் சீனா கடந்த சில ஆண்டுகளாக பெரும் சரிவையும் பாதிப்பையும் எதிர்கொண்டு வருகிறது. ஆம், சீனாவில் கடந்த 10 வருடத்தில் பல உள்நாட்டு பிராண்டுகள் ஸ்டார்பக்ஸ்-க்கு போட்டியாக வந்தது மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்த வந்த ஸ்டார்ட்பக்ஸ், சீன வர்த்தகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது.
இதோடு அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் ஸ்டார்பக்ஸ் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் செயல்படும் அனைத்து அமெரிக்க பிராண்டுகளுக்கும் நெருக்கடி உருவானது. இதனால் கடந்த 10 வருடத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியும், சீன வர்த்தகத்தில் தனது பங்குகளை இருப்பையும் குறைத்துள்ளது.

இது அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்களின் லிஸ்ட். ஸ்டார்பக்ஸ் சீனாவில் 6,500 க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகிறது. இந்த விற்பனை மூலம் Boyu Capital பெரும்பான்மை பங்கை பெறும். ஸ்டார்பக்ஸ் இன்னும் சிறு பங்கை தக்கவைத்துக்கொள்ளும். அமெரிக்க-சீன வர்த்தக போர் குறைந்தாலும், உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு அமைப்பது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது.
ஸ்டார்பக்ஸ் மட்டுமல்ல, பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி வருகின்றன. 2014இல் Best Buy தனது 184 கடைகளை ஜெஜியாங் ஜியாயுவான் குரூப்பிற்கு விற்றது. 2016இல் Yum Brands தனது Yum China பங்கை Primavera Capital மற்றும் அலிபாபாவிற்கு 460 மில்லியன் டாலருக்கு விற்று, பின்னர் பிரித்து NYSEயில் பட்டியலிட்டது.

Uber 2016இல் Didi Chuxing உடன் இணைந்து 35 பில்லியன் டாலர் மதிப்பில் வெளியேறியது. McDonald's 2017இல் CITIC மற்றும் Carlyle குரூப்பிற்கு 2.1 பில்லியன் டாலருக்கு பெரும்பான்மை பங்கை விற்றது. Amazon 2017-2019 இல் AWS சொத்துகளை Beijing Sinnetக்கு விற்று, உள்ளூர் சந்தையை மூடியது. Gap 2022இல் Baozunக்கு 50 மில்லியன் டாலருக்கு சீன வியாபாரத்தை விற்றது.
சீன சந்தையின் சவால்கள்
சீனாவில் உள்ளூர் நிறுவனங்களின் வலுவான போட்டி, கடுமையான விதிமுறைகள், அதிகப்படியான உள்ளீடு செலவு ஆகியவை அமெரிக்க நிறுவனங்களை வெளியேறத் தூண்டுகின்றன. அமெரிக்க-சீன வர்த்தக போர், டிரம்ப் அரசின் வரி மிரட்டல்கள் வெளியேறும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications