துபாய் & வாசிங்டன்: நேற்று (ஜூலை 19, 2019) காலை 23 பேர் கொண்ட, Stena Impero என்கிற இங்கிலாந்து நாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடத்தி விட்டதாக, கப்பலின் உரிமையாளரான Stena Bulk நிறுவனம் சொல்லி இருக்கிறது . இந்த 23 பேரில் இந்தியர்கள், ரஷ்யர்கள், லாத்வேனியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் என மற்ற நாடுகளையும் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது Stena Bulk நிறுவனம்.
ஈரானுக்கு அருகில், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில், வைத்து Stena Impero டேங்கர் கப்பலை ஈரான் கடத்தி இருக்கிறது. ஏன் எனக் கேட்டால் Stena Impero கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறிவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஈரானின் புரட்டசிகர பாதுகாவலர்கள் (Iran Revolutionary Gauards).

ஆனால் Stena Impero கப்பலின் உரிமையாளர்கள் கப்பல் சர்வதேச வதிமுறைகள் படி தான் இருக்கிறது என்றும், கடத்தப்படுவதற்கு முன் வரை சர்வதேச கடல் பகுதிகளிலும் தான் தங்கள் Stena Impero பயணித்துக் கொண்டிருந்தது என்றும் அழுத்தமாக தங்கள் மறுப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரிட்டன் நாட்டின் எம் வி மெஸ்டர் (M V Mesdar) என்கிற கப்பலையும் ஆயுதம் ஏந்திய ஈரானிய புரட்சிப் படை பாதுகாவலர்கள் கடத்தி இருக்கிறார்கள் ஆனால் அந்த கப்பலை விரைவில் விடுவித்துவிட்டார்களாம். Stena Impero கப்பலின் உரிமையாளர்கள், தங்கள் கப்பலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தற்போது கைவிரித்திருக்கிறார்களாம். ஆனால் ஹொர்முஸ் ஜலசந்தி பகுதியில் தான் தங்கள் Stena Impero கடத்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்கள்.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலர் ஜெர்மி ஹண்ட் "உடனடியாக இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு காணவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இங்கிலாந்து ராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண விரும்பவில்லை. மாறாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது" எனச் சொல்லி இருக்கிறார். Stena Impero கப்பலை நான்கு கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சூழ ஈரான் கடல் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜெர்மி ஹண்ட்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications