மீண்டும்.. மீண்டுமா..? ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து பிரச்சினையை கிளப்பும் டிரம்ப்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்டவற்றின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எப்போது தான் ஈரான் போர் முடியும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகும் என உலக நாடுகள் காத்திருக்கின்றன.

ஈரானும், அமெரிக்காவும் ஹார்முஸ் விவகாரத்தில் எந்த உடன்பாடும் எட்டாமல் இருக்கின்றன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடுகின்றன. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தை அமெரிக்காவுக்கே சொந்தம், இந்த கடல் வழித்தடம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மீண்டும்.. மீண்டுமா..? ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து பிரச்சினையை கிளப்பும் டிரம்ப்..!!

அமெரிக்காவின் தடைகளை மீறி ஹார்முஸ் ஜலசந்திய தாண்டிச்செல்ல முயலும் ஈரான் நாட்டு கப்பல்கள் தாக்கப்படும் என்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களாக இருந்தால் அவை உடனடியாக கடலில் மூழ்கடிக்கப்படும் என்றும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இதனால் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஈரானுடனான தற்போதைய மோதல் குறித்து பேட்டி அளித்துள்ள டிரம்ப், இந்த போர் எப்படி முடிகிறது என்பது ஈரானின் போக்கை பொறுத்தது என குறிப்பிட்டுள்ளார். போர் "ஒரு நல்ல வழியிலோ அல்லது கடுமையான வழியிலோ" முடிவுக்கு வரும் என்றும், அது எத்தகையது என்பதை ஈரான் நாட்டவர்கள் விரைவில் உணர்வார்கள் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Also Read

அதே வேளையில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி எங்களுக்கே சொந்தம், இங்கே கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு முழுவதும் தங்களது இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என கூறியுள்ளது. இதனால், மீண்டும் ஹார்முஸ் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற பிரச்சினை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.போருக்கு மத்தியிலும் ஈரான் எண்ணெய்யை விற்று நிதி பெறுவதை முடக்கும் வகையில் அமெரிக்கா ஹார்முஸ் பகுதியில் தனது கடற்படை மூலம் அந்த பகுதியை கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறுகிறது.

முன்னதாக அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், ஈரானின் எண்ணெய் வள துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹமித் போவார்ட் புதிய தற்காலிக எண்ணெய் வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பதில் உடன்பாடு கிடைத்துவிட்டால் கிட்டதட்ட போரே முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இதில் தான் இரு தரப்புமே முடிவெடுக்காமல் உள்ளன. இந்த நீரிணையை கைப்பற்றுவதில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவும் இந்த நேரடி மோதல், உலகளாவிய எரிசக்தி சந்தையை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

இங்கே சிறிய மோதல்கள் வெடித்தாலும் கூட, அது ஒட்டுமொத்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலையையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் நவம்பரில் இடைக்கால தேர்தல் நடைபெற இருப்பதால் அதன் பின்பு போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+