ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?: ஈரானின் 7 நிபந்தனைகளை ஏற்றதா அமெரிக்கா? முக்கிய அப்டேட்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்த விவகாரத்தில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டால் தான் கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை சீராகும். அப்போது தான் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு குறைந்து அவற்றின் விலை சரிவடையும்.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் 7 நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு முன் வைத்து கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு அமெரிக்கா அளித்த பதில் திருப்தியாக இல்லை என ஈரான் கூறியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும் முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளரும், அந்நாட்டின் பாதுகாப்பு துறை தலைவருமான மொஹ்சென் ரெசாய் தங்களின் கடிதத்திற்கு அமெரிக்கா அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?: ஈரானின் 7 நிபந்தனைகளை ஏற்றதா அமெரிக்கா? முக்கிய அப்டேட்

நாங்கள் அமெரிக்காவிடம் 7 நிபந்தனைகளை முன்வைத்தோம். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்றும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்கா சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், பல நிபந்தனைகள் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதல்களை தொடங்கியதை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலகின் மிக முக்கியமான கடல் வழிப்பாதை முடங்கியிருப்பதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம் ஆகியவை கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக அளவிலும் பல நாடுகளின் பொருளாதாரமே ஸ்தம்பித்து போயுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து ,மீண்டும் கப்பல் போக்குவரத்தை சீராக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அமெரிக்காவும் ஈரானும் இதில் உடன்பாட்டுக்கு வராமல் அடம்பிடிக்கின்றன.

Also Read

முன்னதாக இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரவும், ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் கத்தார் நாட்டின் மத்தியஸ்தர்கள் இரு நாடுகளுக்கும் இடையே தூதுவர்களாக செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் ஹார்முஸை கட்டுப்படுத்துவது யார் என்பதில் இரு தரப்பும் முடிவெடுக்காமல் இருப்பதே இது தீராமல் இருக்க காரணம்.

Recommended For You

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மோதலை மிக விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றார். எனினும், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலுக்கு முன்பு தனது அரசியல் நிலையை பலவீனப்படுத்தும் நோக்கில் ஈரான் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்றார். எனவே நவம்பர் 3ஆம் தேதிக்கு முன்னதாக ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை திட்டமிடலாம் என சொல்லப்படுகிறது. இது நடந்தால் ஹார்முஸில் நிலைமை இன்னமும் மோசமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+